Rajapaksa: இலங்கையையே கண் அசைவில் வைத்திருந்த ராஜபக்சே தட்டித்தடுமாறி வரும் வீடியோ.. நிலமையை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தனது கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வந்த ராஜபக்சேவை கைத்தாங்கலாக அவரது ஆதரவாளர்கள் அழைத்து வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இலங்கையை தன் கண் அசைவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வைத்து இருந்த மகிந்த ராஜபக்சேவின் தற்போதைய நிலையை பாருங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இலங்கையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிபராகவும், 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் அதிகாரத்தில் கோலோச்சியவர் ராஜபக்சே. 80 வயதான ராஜபக்சே சமீப காலமாக இலங்கையில் பொதுவெளியில் தலைகாட்டுவது இல்லை. கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜனமுன்னணி கட்சி படுதோல்வியை சந்தித்தது.

Rajapaksa former Sri Lankan president appeared visibly frail at party rally

தட்டுத்தடுமாறி வந்த ராஜபக்சே

இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுர குமரா திசநாயகே பதவியேற்றுள்ள நிலையில், ஊழல் வழக்குகளை ராஜபக்சே குடும்பம் எதிர்கொண்டுள்ளது. மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் அதிபருமான கோத்தபய ராஜபக்சே போர் விமான கொள்முதல் முறைகேடு தொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ளார். அதேபோல அவரது மகனும் எ நமல் ராஜபக்சே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மகன், உடன் பிறந்த தம்பி அடுத்தடுத்து வழக்குகளை சந்தித்து வரும் நிலையில், சமீப காலமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ராஜபக்சே இருந்து வந்தார். இந்த நிலையில்தான், இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற பொது ஜன முன்னணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்சே பங்கேற்றார். நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறி வந்த ராஜபக்சேவை அவரது ஆதரவாளர்கள் கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்து வந்தனர்.

10 ஆண்டுகளில் எப்படி மாறிவிட்டது

மேடையில் கை அசைக்க கூட ராஜபக்சே சிரமப்பட்டதை வீடியோவில் காண முடிந்தது. மக்களை பார்த்து கை மட்டும் அசைத்த ராஜபக்சே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உடனடியாக அங்கிருந்து அவரது ஆதரவாளர்கள் ராஜபக்சேவை அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தனர்.

இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. மொத்த இலங்கையையும் தனது கண் அசைவில் வைத்து இருந்த ராஜபக்சேவின் நிலை 10 ஆண்டுகளில் எப்படி மாறிவிட்டது பாருங்கள் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+