ஆதார் கார்டில்.. நம்ம விவரங்களை மாற்ற முடியுமா? மத்திய ஆதார் ஆணையம் (UIDAI) வெளியிட்ட மேஜர் தகவல்
சென்னை: ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியுமா? என்ற சந்தேகம் பரவலாக உள்ள நிலையில், அதுகுறித்து, இந்திய தனித்துவ ஆதார் அடையாள ஆணையம் விளக்கம் தந்துள்ளது.
ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது..

அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.
ஆவணங்கள்: அதாவது, ஆவணங்களை, டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது... ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அவைகள் இருக்க வேண்டும்... ஆதார் அட்டை , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு..
டிஜிட்டல் லாக்கர்: தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாகவே அரசின் ஆவணங்களை டவுன்லோடு செய்து மொபைல் போனில் சேமித்து வைத்துக்கொள்வதற்கான வசதிகளையும் சமீபத்தில் அறிவித்தது.. இதற்கு டிஜிட்டல் லாக்கர் என்ற கணக்கு வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும்.. ஒருவேளை, உங்களிடம் டிஜிட்டல் லாக்கர் கணக்கு இல்லையெனில் Digital Locker App அல்லது இதற்கான இணையதளத்தை பயன்படுத்தி டிஜிட்டல் லாக்கர் கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். இதோ அதற்கான வழிமுறைகள்:

- இதற்கு முதலில் +91 9013151515 என்ற MyGov Helpdesk-ன் எண்ணிற்கு Hi என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.
- அதன் பிறகு Digital Locker சேவை மற்றும் WhatsApp goin என இரண்டு தேர்வுகள் திரையில் தோன்றும்.
- இதில் Digital Locker கணக்கை கிளிக் செய்து உங்களின் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
- அதன் பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும்.
- இப்போது இந்த OTP எண்ணை உள்ளிட்டால் டிஜிட்டல் ஆக்கரில் சேமித்து வைத்துள்ள அரசின் ஆவணங்கள் ஒரு chartboard தோன்றும்.
- இப்போது நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேவையான அரசின் ஆவணங்களை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
- இப்போது உங்களின் ஆவணங்கள் PDF வடிவத்தில் தங்களின் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படும்.
இந்நிலையில், மத்திய ஆதார் ஆணையம் (UIDAI) முக்கியமான தகவலை அறிவுறுத்திஉள்ளது.. ஆதார் அட்டையில் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் அடங்கியுள்ளதாலும், அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதாலும், அதில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய ஆதார் ஆணையம் (UIDAI) தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதில், ஏதேனும் விவரங்கள் மாற்றம் இருப்பின் ஆன்லைன் வாயிலாகவும் அரசின் இ- சேவை மையம் வாயிலாக உடனுக்குடன் அதனை அப்டேட் செய்து கொள்ள வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன..
மத்திய ஆதார் ஆணையம்: இதில், விவரங்களை மாற்ற வேண்டும் என்றால், கட்டாயம் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் தேவை... இது இருந்தால் போதும், நீங்களாகவே வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகவே அப்டேட் செய்யலாம். இன்னொரு முக்கியமான தகவல் ஆதார் அட்டை பற்றி UIDAI வெளியிட்டுள்ளது. அதன்படி இனிமேல், ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது... இதனை மாற்ற அரசு ஆதார் சேவை மையத்தில் மட்டுமே மாற்ற முடியும் என்றும் UIDAI எனப்படும் மத்திய ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications