சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளின் அன்பான கவனத்திற்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து சேவையை லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் போக்குவரத்து சேவையில் இந்திய ரயில்வே முக்கியப் பங்காற்றி வருகிறது. பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு ரயில் போக்குவரத்திலும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

Maintenance work Express trains

கல்வி, வேலை, மருத்துவம், தொழில் என பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குறைந்த செலவிலும், விரைவாகவும் செல்வதற்கு ரயில் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த சமயங்களில் ரயிலின் இயக்கங்களில் மாற்றம் செய்யப்படும்.

அந்த வகையில், கரூர் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடைய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கரூர் - திருச்சி பிரிவில் கரூர் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து பிப்ரவரி 18 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (16811) நாளை வீரராக்கியம் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.

இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். வீரராக்கியம் முதல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை இயக்கப்படாது. மேலும், சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16812) நாளை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும்.

இதேபோல பிப்ரவரி 18 ஆம் தேதி மற்றும் 25, 27 ஆகிய தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செல்லாமல் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மதியம் 12.17 மணிக்கு போத்தனூர் வந்தடையும். அங்கிருந்து 12.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இதேபோல எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) நாளை மற்றும் 25, 27 ஆகிய தேதிகளில் கோவை ஜங்ஷன் வழியாக செல்லாமல் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மதியம் 12.47 மணிக்கு போத்தனூர் வந்தடையும். தொடர்ந்து அங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+