சென்னை மக்களே ரெடியா இருங்க.. நாளை மறுநாள் பவர்கட்.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா
சென்னை: சென்னையில் பிப்ரவரி 12 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடவுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொன்னேரி, தேனாம்பேட்டை, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் மின்வாரிய அதிகாரிகள் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி 12 ஆம் தேதியான நாளை மறுநாள் (புதன்கிழமை) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சென்னையில் 12-02-2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: பொன்னேரி: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட்டு சாலை, பெரியபாளையம் சாலை, ஜகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பார்ம், மல்லிவாக்கம், ஆமூர், ஜகநாதபுரம் சத்திரம், குதிரைபள்ளம்.
கிழக்கு முகப்பேர்: திருவள்ளுவர் சாலை, மகிழ்ச்சி காலனி, கார்டன் அவென்யூ, ஸ்பார்டன் அவென்யூ, அரசர் தெரு, வேலம்மாள் பள்ளி சாலை , பென் அறக்கட்டளை பொன்னியம்மன் நகர் வெள்ளாளர் தெரு, காமராஜ் தெரு, பி.கே.எம் சாலை, பள்ளி தெரு, இந்திரா காந்தி தெரு, இருளர் தெரு, பாடசாலை தெரு, எட்டீஸ்வரன் கோயில் தெரு , வைஷ்ணவி நகர்.
திருமுல்லைவாயல்: மோரை, மாதா கோவில், அண்ணா நகர், வீராபுரம், திருமலை நகர், மாகரல், கொமுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி, கரளம்பாக்கம், காவனூர், கேடிபி சாலை, மேல் கொண்டையார், கதவூர், வெள்ளச்சேரி, பொத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடப்பாளைம், சிவ கார்டன், செல்லி அம்மன் நகர், லஷ்மி நகர், ஆர்கேஜெ வள்ளிவேல் நகர், தாய் நகர், அலமாதி, ஏபிசி காலனி, வெண்மணி நகர்.
தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், திருவள்ளுவர் சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தாம்மாள் காலனி, கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு.
ஆர்.டி.ஓ.டி, கதீட்ரல் சாலை, ஜே.ஜே.சாலை, பார்த்தசாரதி பேட்டை மற்றும் கார்டன், கே.ஆர்.சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி.ராஜா தெரு, ஏ.ஆர்.கே.காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications