சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூண்டி கலைவாணனுக்கு வந்த கோபம்.. வேட்டியை மடித்து கட்டிய செல்வராஜ்.. டெல்டாவில் ரயில் மறியல் இன்று

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, இன்று முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் துவங்கி உள்ளது.. நாகை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் இந்த போராட்டம் இன்று முதல் நடைபெற்று வருகிறது.. அந்தவகையில், திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான ரெயில்கள் குறித்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வருகிறது.. ஆனால், அவைகளை தென்னக ரெயில் கண்டுகொள்ளாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளாகவே, திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில், கேட் கீப்பர்கள் உள்ளிட்ட நிறைய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.

மாட்டை தடுக்கணும்.. தண்டவாளத்துக்கு வேலி போடும் ரயில்வே துறை.. 'ஐடியாவை' கலாய்க்கும் நெட்டிசன்கள் மாட்டை தடுக்கணும்.. தண்டவாளத்துக்கு வேலி போடும் ரயில்வே துறை.. 'ஐடியாவை' கலாய்க்கும் நெட்டிசன்கள்

 என்ஜின்கள்

என்ஜின்கள்

இந்த பணியில், முன்னாள் ராணுவத்தினர் இந்த பணியில் சேர தயக்கம் காட்டுவதால், நிரந்தர பணியாளர்களை இதற்காக பணியமர்த்த வேண்டும், விழுப்புரம், திருச்சி தவிர வேறு எங்கும் ரயில் பராமரிப்பு வசதிகள் இல்லாததால் அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் உள்ள திருவாரூரில் அனைத்து ரயில்களுக்கான முதன்மை பணி அமைத்திட வேண்டும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 மணி நேரத்திற்கு நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்படுவதால் அவசர உறுதிகளான ஆம்புலன்ஸ் 108 சேவை வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை, இதை கருத்தில் கொண்டு செம்மொழி விரைவு ரயிலுக்கான இன்ஜின் மாற்றத்தை திருவாரூரில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபடியே உள்ளன.

 நாகை செல்வராஜ்

நாகை செல்வராஜ்

மேலும், காலையில் காரைக்கால் இருந்து சென்னைக்கு ஒரு விரைவு ரயில் இயக்க வேண்டும் என்றும், அதிகாலையில் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் தஞ்சாவூர் வழியாக கன்னியாகுமரிக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என்பது உட்பட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வரப்படுகிறது.. ஆனால், தென்னக ரயில்வே இவைகளை கண்டுகொள்ளாமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கடந்த 4 நாட்களுக்கு முன்பு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

 பூண்டி கலைவாணன்

பூண்டி கலைவாணன்

அப்போது, 28ம் தேதி அதாவது இன்று முதல், திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்த கூட்டாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததுமே, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இருவருமே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் சொல்லும்போது, "டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான ரெயில்கள் குறித்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகிறது. ஆனால், தென்னக ரெயில்வே அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தி, நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.

சான்ஸ்

சான்ஸ்

எனவே டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயை கண்டித்து வரும் 28ம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஒருமித்தமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.. மக்கள் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த போராட்டம். நாங்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்து செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பலமுறை நிறைய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்தும் நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதும் நிறைய பேசியிருக்கிறார். அவருக்கு பொதுமக்கள் அந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் அதிக ரயில்களை இயக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட்கள்

கம்யூனிஸ்ட்கள்

மீண்டும் இந்த திருவாரூர் நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பெரிய அளவில் பழைய மாதிரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதை எவ்வளவோ வலியுறுத்தியும் தென்னக ரயில்வே கேட்காத காரணத்தினால் பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அரசியல் இயக்கங்கள் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது" என்றார்.. அந்தவகையில், டெல்டாவின் 4 இடங்களில் இன்று ரயில் மறியல் நடத்தப்படும் என தெரிகிறது.. இதற்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க திரளுவதாக தகவல்கள் வரும் நிலையில், பரபரப்பு டெல்டாவில் எகிறி வருகிறது.

தொடங்கியது

தொடங்கியது

அந்தவகையில், திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாகக்கூறி அனைத்துக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏராளமானோர், போராட்ட பகுதிக்கு திரண்டு சென்று வருகிறார்கள்.

English summary
Major announcement and all party leaders jointly announced the rail strike today in Delta Districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X