சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபத்து.. பிரபல ஷாம்பூவால் கேன்சர்.. இத்தனை ஷாம்பூக்களா.. ஆய்வில் அப்பட்டம்.. திரும்பபெற்ற யுனிலீவர்

டவ் ஷாம்புக்களை பயன்படுத்தினால் கேன்சர் பாதிப்பு வரும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: டவ் உள்ளிட்ட ஷாம்பூ நிறுவனங்களின் ட்ரை ஷாம்பூக்களில் கேன்சர் உருவாக்கும் வேதியியல் பொருள் அதிகம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இதையடுத்து ஷாம்பூ பயன்படுத்துவோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஷாம்புக்களை நிறைய நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.. அவைகளில் சில ஷாம்புகள் மார்க்கெட்டுகள் பிரபலமானமாவையாக இருப்பதில்லை. எனவேதான், பிராண்டட் ஷாம்புகளை நாடி செல்வோர் ஏராளமாக உண்டு.

அதேசமயம், ரசாயனங்கள் எதுவுமேயில்லாமல் எந்தவொரு தயாரிப்பும், இப்போதெல்லாம் தயாரிக்கப்படுவதில்லை.. இந்த பொருள்கள் கெடாமல் இருக்க ரசாயனம், நீண்டநாள் வரை புதிதாக இருக்க வேறுவகையான ரசாயனம் என ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.

 டவ் ஷாம்பு

டவ் ஷாம்பு

மக்களும் இதை பற்றி எதையுமே தெரிந்து கொள்ள விரும்பாமல், அவைகளை உபயோகித்து அறியாமலேயே நோய்களிலும் சிக்கிவிடுகின்றனர்.. அந்தவகையில், பிரபலமான பிராண்டான டவ் உட்பட பல ஷாம்பூக்கள், யூனிலீவர் பிஎல்சி நிறுவனத்தால் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கு காரணம், இந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பென்சீன் எனப்படும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் என்ற நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

 கெமிக்கல்ஸ்

கெமிக்கல்ஸ்

ஃபுட் அண்ட் ட்ரக் அத்தாரிட்டி நிறுவனத்தின் வெப்சைட்டில், நெக்சஸ், சாவ், ட்ரெசமே மற்றும் டிஐஜிஐ (Nexxus, Suave, Tresemmé, and Tigi) போன்ற பிராண்டுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.. அமெரிக்காவில் விற்பனையாகும் ஷாம்பூ உள்ளிட்ட பல பொருட்களும் வேதியியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன... அப்படித்தான், சமீபத்தில் கனெக்டிகட்டில் உள்ள நியூ ஹேவனில் உள்ள வேலிஷ்யூர் என்ற ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.. இந்த ஆய்வில், இந்துஸ்தான் யூனிலிவர் தயாரிப்பான டவ் ட்ரை ஷாம்பூவில் பென்சின் என்ற வேதிபொருள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது..

 டவ் ஷாம்புக்கள்

டவ் ஷாம்புக்கள்

இந்த வேதிபொருள், கேன்சரை உருவாக்கும் அபாயம் கொண்டதாம்.. டவ் ஷாம்பூ மட்டுமல்லாமல் நெக்ஸஸ், சாவே, டிகி மற்றும் ட்ரஸ்ஸமே உள்ளிட்ட ஷாம்பூ நிறுவன பொருட்களிலும் இதே ஆபத்து நிறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது... இந்த ஆய்வில் புற்றுநோய் அபாயம் உறுதியானதால், தன்னுடைய தயாரிப்புகளை திரும்ப பெறும் முடிவை இந்துஸ்தான் யூனிலிவர் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது... அதாவது, யுனிலீவர் நிறுவனம் அக்டோபர் 2021-க்கு முன் தயாரிக்கப்பட்ட உலர் ரக ஷாம்ப்பூக்கள் அத்தனையும் திரும்பப் பெற்றுள்ளது.

கேன்சர்

கேன்சர்

அதேசமயம் இந்த ஆய்வு இந்திய சந்தை தயாரிப்புகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்சீனின் வெளிப்பாடு லுகேமியா மற்றும் பிற ரத்த புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.. பென்சீன் என்பது பெட்ரோலியப் பொருட்களில் அறியப்பட்ட ஒரு பொருள் ஆகும்.. உலர் ஷாம்புகள் மற்றும் ஸ்ப்ரே-ஆன்கள் புரோபேன் மற்றும் பியூட்டேன் போன்ற உந்துசக்திகளை இவை கொண்டிருக்கின்றன. மேலும், கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோலியத்தை காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படுபவையும்கூட..

எஸன்ஸஸ்

எஸன்ஸஸ்

இப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதே பென்சீன் மாசுபாட்டை காரணம் காட்டி, பேண்டீன் மற்றும் ஹெர்பல் எசன்ஸஸ் உலர் ஷாம்புகளை (Pantene and Herbal Essences dry shampoos ) திரும்பப் பெற்றது... இப்போது இன்னொரு கம்பெனி திரும்ப பெற்றுள்ளது.. இதுகுறித்து வேலிஷ்யூர் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் லைட் சொல்லும்போது, "நாங்கள் கவனித்ததை பொறுத்தவரை, ஏரோசல் உலர் ஷாம்புகள் போன்ற பிற நுகர்வோர் - தயாரிப்பு வகைகள் பென்சீன் மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படலாம்.. அதனால், இதுகுறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

English summary
Major announcement and dove and other shampoos recall over cancer risk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X