இது லிஸ்ட்லேயே இல்லயே.. அதென்ன "பிங்க்" வாட்ஸ்அப்.. இதுக்குள்ளே இவ்ளோ மேட்டர் இருக்கா? போலீஸ் அதிரடி
சென்னை: பொதுமக்கள் வாட்ஸ்அப் க்ரூப்களை கவனமாக கையாள வேண்டும் என்று, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. அத்துடன் சில அறிவுரைகளையும் தந்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் இன்றைய சூழலில் அபரிமிதமாகவே வளர்ந்துவிட்டது.. நம்முடைய பயன்பாட்டுக்காக செல்போனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வகையில் நிறைய செயலிகளும் (ஆப்கள்) வரிசைக்கட்டி வந்துவிட்டன.
இந்த ஆப்கள் எல்லாம், நம்முடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு பேருதவியாக இருந்து வருவது வாட்ஸ்அப்களில்தான்.. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள்.. இதைத்தான் சில மோசடிப்பேர்வழிகள் தவறாக பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள்.
ஆப்கள்: வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்கள் மூலம், நம்முடைய தனிபட்ட தகவல்களையும், வங்கி கணக்குகளையும் திருடி நம்முடைய பணத்தையும் அபகரித்து விடுகிறார்களாம்.. சில நாட்களுக்கு முன்புகூட இதைப்பற்றி, போலீசார் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

பிங்க் ஆப்: அதில், "செல்போனில் "வாட்ஸ்அப் பிங்க்" என்ற பெயரில் பச்சை நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாக கூறும் லிங்க் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.. தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் ஆபத்தான வைரஸ் இதுவாகும். முதலில் வாட்ஸ்அப் குழுக்களில் பிங்க் லிங்கை அனுப்பி பதிவிறக்கத்திற்கு இணைப்பை கிளிக் செய்ய கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பதிவிறக்கம் செய்யும் போது லிங்கில் மறைந்திருக்கும் ஆபத்தான வைரசும் சேர்ந்து பதிவிறக்கம் ஆகிவிடும்.
கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உடனடியாக மொபைலில் முழுமையாக பரவி வாட்ஸ்அப் குழுவில் பதிவிடும் நபர் எந்த குழுவில் இருந்தாலும் அந்த குழுவில் உள்ள நபருக்கு பிங்க் வாட்ஸ்அப் அப்டேட் என்று தானாகவே பதிவாகிறது. இந்த லிங்கை யாராவது தொட்டால் வாட்ஸ்அப் முழுவதும் ஹேக் செய்து வங்கி கணக்குகள் முதல் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படும்.
வைரஸ்: இது மட்டுமல்லாமல் போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், தொலைபேசி எண்கள் உள்பட பல தகவல்கள் திருடப்படுகின்றன. இந்த வைரசை தடுப்பதற்கான முதல் வழிமுறை இந்த லிங்கை யாரும் தொடக்கூடாது. உடனடியாக லிங்கை கிளியர்சாட் கொடுத்து விலக்கி விடுவதே சிறந்த வழி முறையாகும். எந்த செயலியையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோடு செய்ய வேண்டும்.
வேறு எந்த இணைப்பிலும் டவுன்லோடு செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்" என்று போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இது தொடர்பான மோடிகள் பெருகி வருவதாக தெரிகிறது..
தனிப்பட்ட தகவல்கள்: பிங்க் நிற வாட்ஸ்அப் ஆப் மீண்டும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறதாம்.. "வாட்ஸ்அப் செயலியில் பிங்க் நிற வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்ய" என்ற லிங்க் அனுப்பப்படுகிறது. இதனை கிளிக் செய்யும்போது பயனரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது.. இதன் வாயிலாக மோசடி கும்பல் வங்கி கணக்கில் பணம் கையாடல் செய்து விடுகின்றனர்.
இதுகுறித்து மும்பை காவல்துறை, பொதுமக்களுக்கு தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒடிசாவை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர், பிங்க் வாட்ஸ்அப் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால், நீங்கள் இந்த செயலியை முதலில் மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications