வீட்டு சிலிண்டரை "கையிலெடுத்த" மோடி.. சபாஷ் பிரதான் மந்திரி உஜ்வாலா.. கேஸ் விலை - இல்லத்தரசிகள் குஷி
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜக அரசு பல்வேறு அதிரடிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.

காஸ் அடுப்பு: இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது..
பின்னர் அரசின் முடிவுக்கு பின்னர், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அந்தவகையில், இதில் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறார்கள்.
காப்பீடுகள்: அதேபோல, சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது... அதாவது, சிலிண்டரில் கேஸ் லீக்கேஸ் மற்றும் சிலிண்டர் வெடிப்புகள் போன்றவை நடந்துவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு கிடைக்கிறது. இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐசிஐசிஐ லம்பார்டு போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருக்கின்றன. மொத்தத்தில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை , 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மானிய தொகை: கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே, இந்த திட்டத்திற்கான மானியத்தை, சிலிண்டருக்கு 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக அரசு உயர்த்தியிருந்தது.. தற்போது, வரும் 2025ம் வருடத்துக்குள் இந்த திட்டத்துகான மொத்த மானிய செலவு ரூ.12,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், பெரும்பாலான திட்டங்களை மத்திய அரசு விரிவுபடுத்தி வருகிறது. அந்தவகையில், உஜ்வாலா சிலிண்டர் மான்யம் தொடர்பாகவும், முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பாக, உஜ்வாலா சிலிண்டர் மானிய திட்டத்தினை, மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும, இதற்கான அறிவிப்பை இன்னும் சில நாட்களில் அரசு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்தான், பிஎம் கிசான் திட்டத்தில் 16வது தவணை விடுவிக்கப்பட்டது.. இந்த திட்டத்தில் இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகள்: 16வது தவணையையும் வழங்கியிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு செய்தி குறிப்பில் கூறுகிறது. விவசாயிகளுக்கான சர்ப்ரைஸ் வழங்கியதை போலவே, இல்லத்தரசிகளுக்கும் விரைவில், கேஸ் சிலிண்டர் மானியம் மூலமாக சர்ப்ரைஸ் வரக்கூடும் என்கிறார்கள்.
100 ரூபாய்: இந்த நிலையில், இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான பெண்களின் நிதிச் சுமை குறையும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications