Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்டிக்கடை, டீக்கடைகளில் பீடி, சிகரெட் இனி கிடைக்காது.. "லைசென்ஸ்" வேணுமாம்.. புது நடைமுறை வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீடி, சிகரெட் ஆகிய புகையிலை பொருட்களை விற்பனை , தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமலாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புற்றுநோய்களுக்கு பிரதான காரணமாக புகையிலை பொருட்கள் என்பது அனைவருமே அறிந்த விஷயமாகும்.. எனினும், புகையிலையை உபயோகிப்பவர் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது.

Major announcement only licensed shops are now allowed to sell cigarettes, what are the guideline

விழிப்புணர்வு: எனவேதான் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக புகையிலை எதிர்ப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 'நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல' என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

உயிரிழப்புகள்: உலகம் முழுவதும் வருடத்துக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றார்கள்.. அதாவது, புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், வாய்ப்புற்று நோய், நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்ட நோய்களால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 15 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது அதிர்ச்சி தகவலாகும்.

அதாவது, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான்பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால்தான், நம் நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இதே நிலைமை நீடித்தால், இன்னும் 10 வருடத்தில், நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதம் புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் என்றும் பகீர் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

Major announcement only licensed shops are now allowed to sell cigarettes, what are the guideline

சிகரெட்டுகள்: அதனால்தான், புகையிலை பயன்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நிறைய வழிவகைகளை மேற்கொண்டு வருகின்றன.. அதில் ஒன்றுதான், இந்த லைசென்ஸ் முறை.. இந்த புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பெட்டிக்கடை, டீக்கடைகளில் இப்போது உள்ளதை போல, பீடி, சிகரெட்களை விற்க முடியாது.. லைசென்ஸ் உள்ள கடைகளில் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய முடியுமாம்.. அதிலும், அந்த கடைகளில் பீடி சிகரெட்டை தவிர்த்து வேறு எதையும் விற்கவும் இயலாது..

இந்த விதிகளை மீறினால், சம்பந்தப்பட்டவர்களின் கடைகளுக்கான லைசென்ஸை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவு திட்டத்தில் விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன..

புதிய நடைமுறை: புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது.. அதன்படி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமமும் நடைமுறையில் உள்ளது.. அதுபோலவே, நம் தமிழகத்திலும் கட்டுப்பாட்டை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாம்.. சில வருடங்களுக்கு முன்பே இந்த திட்டம் யோசிக்கப்பட்டதாம்.. ஆனால் கொரோனா காரணமாக அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்கிறார்கள்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் சின்ன சின்ன மளிகை கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. அது தொடர்பாக அறிவிப்பு பலகைகள் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

சிறுவர்கள்: ஆனால் அவற்றை மீறி எல்லோருக்குமே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால்தான், புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் பீடி, சிகரெட் விற்பனையை குறைக்க முடியும். இதன்மூலம் சிறுவர்களிடையே புகைப்பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+