Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார் ரேஸ், பேனா சிலை என மக்கள் பணத்தில் வீண் செலவு.. அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஃபார்முலா 4 கார் பந்தயம் , பேனா சிலை வைப்பது என மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகக் கூறி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொது குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

aiadmk general committee edappadi palaniswami

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஃபெஞ்சல் புயலில் சரியாக செயல்படாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானங்களின் விவரங்கள்:

1. அதிமுக எம்.ஜி.ஆர். ஜானகி 100 ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. டங்ஸ்டன் தொழிற்சாலைக்கான ஒப்பந்த ஏலத்தை தடுக்கத் தவறியதாக திமுக அரசை கண்டித்தும், மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் ஆலை அமைவதை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. என அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

5. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழ் இடம் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

6. மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

7. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

8. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

9. ஃபார்முலா 4 கார்பந்தயம் , பேனா சிலை வைப்பது பூங்காக்கள் அமைப்பது என மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, போதை பொருட்கள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு ஆகிய உயர்வை கண்டித்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

11. வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றின் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரி செய்திடவும், தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

12. இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக என தீர்மானத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13. அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்த தவறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

14. நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15. தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

16. 2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+