சென்னை மெட்ரோ ரயில் பயணிளுக்கு மேஜர் குட்நியூஸ்.. வரும் 14ம் தேதி முதல் ரெடியா இருங்க!
சென்னை: சென்னை மெட்ரோ பயணிகளுக்கு 14.0.2023 முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, கோயம்பேடு, வடபழனி வழியாக ஒரு பாதை, தேனாம்பேட்டை, நந்தனம் வழியாக ஒரு பாதை இருவழிகளில் சென்னை மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. இது தவிர பரங்கிமலை வரையும் ஒரு தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.

மூன்றாவது வழித்தடம் மெட்ரோ ரயில் பணிகள் பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம், மயிலாப்பூர் வழியாக கலங்கரை விளக்கம் வரையிலும்,. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் சிறுசேரி வரை ஒரு பாதையிலும், மேடவாக்கம் வரை ஒரு பாதையிலும் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் எல்லாம் அடுத்த 3 ஆண்டுகளில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் சென்னை மெட்ரோ ரயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ பயணிகளுக்கு 14.0.2023 முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 14.06.2023 (புதன்கிழமை ) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பொறுத்தவரை கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ இரயிலில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
கட்டண தள்ளுபடியின் விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள வாகன நிறுத்த கட்டண விவரங்கள் https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/10/Parking-Tariff-updated.pdf என்ற இணையதளத்தில் அறியலாம். அல்லது மெட்ரோ ரயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications