Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரியலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம்.. ஒரே நாளில் வளராத மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. பெரும் புரட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இன்று தமிழக அமைச்சரவை பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் முக்கிய முதலீடுகளை செய்து உள்ளன.

தமிழகத்தில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசெம்பிளிங் யூனிட்டை அமைப்பதற்காக சுமார் $1 பில்லியன் முதலீட்டை செய்ய Foxconn நிறுவனம் முடிவு செய்துள்ளது.

foxconn chennai apple


இந்தியாவில் தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளர் Foxconn நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இது போன்ற முதல் தொழிற்சாலை இதுவாகும். அந்த நிறுவனத்தின் பல தொழிற்சாலை இந்தியாவில் இருந்தாலும், டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசெம்பிளிங் யூனிட்டை அமைப்பது இதுவே முதல்முறை. இதிலிருந்து ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கு டிஸ்ப்ளே மாட்யூல்கலாய் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் வரும் காலங்களில் ஃபாக்ஸ்கானின் டிஸ்ப்ளே மாட்யூல் மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களான பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்படும். இத்தனை நாட்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்ட மாட்யூல்களை இறக்குமதி செய்து இவர்கள் பயன்படுத்தினர் . இதற்கு பதிலாக இனி ஃபாக்ஸ்கானின் டிஸ்ப்ளே மாட்யூல்களை பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்த முடியும்.

சீனா + 1 எனப்படும் மாடலின் அடிப்படையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளியே உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் நினைக்கின்றன. அவர்களின் தேர்வாக தமிழ்நாடே இருக்கிறது. இதற்கான தொழிற்சாலை சென்னையில் ஏற்கனவே உள்ள ஃபாக்ஸ்கானின் ஆலை அருகே கட்டப்படும். மிக விரைவில்.. கூடி சீக்கிரம் அங்கே உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பாக்ஸ்கான் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இன்று தமிழக அமைச்சரவை பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் முக்கிய முதலீடுகளை செய்து உள்ளன.

இதற்கான முழு லிஸ்ட் இங்கே வழங்கப்பட்டு உள்ளது: இதில் பெரிதும் வளராத அரியலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு முதலீடுகள் குவிந்து உள்ளன. அரியலூர் போன்ற பெருமளவில் பின்தங்கிய மாவட்டத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. வியட்நாமைச் சேர்ந்த ஷூ உற்பத்தியாளர் "ஃப்ரீடிரெண்ட்" 1,000 கோடி செலவில் 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது . இங்கே காலணி உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.

Freetrend Industrial India Pvt. லிமிடெட் அரியலூர்
கிராண்ட் அட்லாண்டியா பனப்பாக்கம் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட். லிமிடெட். ராணிப்பேட்டை
கெய்ன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் காஞ்சிபுரம்
அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட். லிமிடெட் கிருஷ்ணகிரி
லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட். லிமிடெட் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம்
டேப்லெட்ஸ் இந்தியா லிமிடெட் செங்கல்பட்டு
விஸ்டியன் குழுமம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர்
லூகாஸ் டிவிஎஸ் குரூப் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி
மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட். செங்கல்பட்டு, திருவண்ணாமலை
Nokia Solutions & Networks India Pvt. லிமிடெட். காஞ்சிபுரம்
ராக்வெல் குரூப் 12 சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ் பிரைவேட். லிமிடெட். காஞ்சிபுரம்
சூப்பர் ஆட்டோ செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
Yuzhan Technology (India) Pvt. லிமிடெட். காஞ்சிபுரம்
டாடா மோட்டார்ஸ் லிமிடெட். ராணிப்பேட்டை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+