பச், பாயிண்ட்டை பிடிச்சீங்க.. எடப்பாடி சொன்னதுமே மலைத்த லீடர்.. "கை" வைக்க பாய்ந்த மனோஜ்? ப்ளான் வேற
சென்னை: மனோஜ் பாண்டியன், பேரவையில் நேற்றைய தினம், கையை முறுக்கி கொண்டு, தங்களை நோக்கி பாய்ந்ததை கண்டு எடப்பாடி டீம் அதிர்ந்துவிட்டதாம்.. இதையடுத்து, அதிரடியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. என்ன அது?
நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது, ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்ட மசோதாவை தாக்கல் செய்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படியே, கம்யூனிஸ்ட்கள், பாமக, விசிக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து பேசினர்... அதிமுக சார்பில் பேசிய தளவாய் சுந்தரமும், இந்த சட்டத்தை முழுமையாக அதிமுக ஆதரிக்கிறது என்றார்.

கோவிந்தசாமி
அவரை தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், முதல்வர் கொண்டு வந்த தடை சட்டத்தை விவாதமின்றி ஒருமனதாக நிறைவேற்றி இருக்கலாம், ஆனாலும் விவாதம் நடைபெறுகிறது என்றார்.. உடனே, ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனக்குரல் எழுப்பவும், மற்றொருபுறம், அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமிக்கும் மனோஜ் பாண்டியனுக்கும் வாக்குவாதம் மூண்டது.. 2 பேருமே ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்தனர்.. கோவிந்தசாமியை, எஸ்பி வேலுமணி கையை நீட்டி அமைதி காக்க சொன்னார்... மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

முஷ்டி வேஷ்டி
எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் 2 பேருமே அருகருகே அமர்ந்திருந்த நிலையில் முதன்முறையாக நேற்று நேரடியாகவே பேரவையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது பலராலும் உற்றுநோக்கப்பட்டது.. இந்த ரகளையையொட்டி நேற்று எடப்பாடியும் தனது அணியினருடன் ஆலோசித்திருக்கிறார்கள்.. குறிப்பாக, கே.பி.முனுசாமி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்களிடம் எடப்பாடி ஆலோசித்துள்ளார்.. அப்போது எடப்பாடி, "நம்மிடயே மோதல் வெடிக்கணும்தான் திமுக விரும்புகிறது. இல்லைன்னா, ஓபிஎஸ்சை பேச எதற்கு அனுமதிக்க வேண்டும்? கட்சிக்கு ஒருத்தரைத்தான் பேச அனுமதிக்க முடியும் என்பது சபாநாயகருக்கு தெரிந்தும் அவரை பேச அனுமதிக்கிறார்கள்னா அது முன் கூட்டியே திட்டமிடப்பட்டது" என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார்.

பாயிண்டை பிடிச்சீங்க
அப்போது பேசிய கே.பி.முனுசாமி, ''நீங்க சரியா பாயிண்ட்டை புடிச்சீங்க. அதிமுக சார்பில் என ஓபிஎஸ் சொன்னதும், நம் எம்எல்ஏக்களுக்கு சட்டென்று புரியவில்லை. நீங்கள் எழுந்து பாயிண்ட்டை புடிச்சதும்தான் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். சபாநாயகரின் அனுமதியை கண்டித்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். நான் தடுக்கா விட்டால், மனோஜ் பாண்டியனை நம் எம்எல்ஏக்கள் தாக்கியிருப்பார்கள். அந்த மனோஜ் வேட்டியை மடித்தபோது ஏதோ விபரீதமாக நடக்கப்போகிறதோன்னு நினைச்சேன். நம்மை எரிச்சலடைய வைத்து ரகளை செய்ய தூண்டுகிறார்கள். இதை வைத்தே உங்களை உட்பட முக்கிய எம்எல்ஏக்களை எல்லாம் சஸ்பெண்ட் செய்ய திமுக திட்டமிடுகிறது" என்றாராம் முனுசாமி.

கை வெச்ச திமுக
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஆமாம், ஸ்டாலினின் நோக்கம் அதுதான்.. எதிர்க்கட்சி தலைவரான நான் உட்பட சிலரை 10 நாளைக்கு சஸ்பெண்ட் செய்து விட்டு, சபையில் ஓபிஎஸ்சை அதிமுக சார்பில் பேச வைப்பார்கள். அதுதான் திட்டம்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கேபிமுனுசாமியும் வேலுமணியும், "அப்படின்னா நம் எம்எல்ஏக்கள் யாருமே, உணர்ச்சிவயப்படாத அளவுக்கு பார்த்துக்கணும். நம்மாளுங்க உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் மீது "கை " வெச்சிட்டா அதுவே சிக்கலை ஏற்படுத்தும்" என்று விவரிக்க, எல்லா எம்எல்ஏக்களிடமும் இதனை நீங்களே சொல்லிடுங்க" என்று முனுசாமியிடம் அறிவுறுத்தினாராம் எடப்பாடி.

ப்ளான் முனுசாமி
முனுசாமியும், தங்கள் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு, "பேரவையில் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுங்கள். பேரவையிலிருந்து நம்மை சஸ்பெண்ட் செய்ய திமுக திட்டமிடுகிறது. அதற்கு இடம் கொடுக்காதீர்கள். கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஓபிஎஸ் தரப்பினர் டென்ஷனாக்கினாலும் அதற்கு எடப்பாடியோ நாங்களோ பதில் சொல்லி கொள்கிறோம்.. நீங்கள் உணர்ச்சிவயப்படக் கூடாது" என்று அட்வைஸ் செய்துள்ளார்.. வேலுமணியும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இதே பாணியில் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த அட்வைஸை , அதிமுக எம்எல்ஏக்கள் எந்த அளவுக்கு கடைப்பிடிக்க போகிறார்கள்னு தெரியலை என்கிற ஆதங்கமும் எடப்பாடி, முனுசாமிக்கு இருக்கிறதாம்..!!
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications