Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்ணின் தலையில் பார்த்தீங்களா? ஒரு நிமிஷம் ஆடிப்போன டாக்டர்கள்.. யாரந்த மந்திரவாதி? இப்படி நடக்குமா

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: கடந்த 2 நாட்களாகவே, ஒடிசா இளம்பெண் குறித்த செய்திகள் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகின்றன.. என்ன காரணம்? யாரிந்த பெண்?

தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒருபக்கம் பெருகி வரும்நிலையில், மற்றொருபக்கம் மூடநம்பிக்கைகளும், அதே அளவுக்கு பெருகி கொண்டுதான் இருக்கின்றன.. இது உலகம் முழுவதுமே பரவி கிடக்கின்றன.

Odisha Reshma

நோய் எதிர்ப்பு சக்தி: உடலில் நோய் பாதிப்பு வந்தாலும்கூட, டாக்டர்களிடம் செல்லாமல், மாந்திரீகத்தை நம்பும் அளவுக்கு மூடநம்பிக்கை அதிகமாகிவிட்டது.. இதுபோன்ற மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதால்தான், இது தொடர்பான குற்றங்களும் சர்வசாதாரணமாகிவிட்டன.. ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? இதோ ஒடிசாவில் இப்போதும் ஒரு கொடுமை நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இச்கான் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ரேஷ்மா பெஹெரா.. இவருக்கு 19 வயதாகிறது.. கடந்த சில வருட காலமாகவே இந்த பெண் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

ரேஷ்மா: இதையடுத்து கடந்த வாரம் பீமாபோய் மருத்துவமனையில் இந்த பெண் அனுமதிக்கப்பட்டார். அப்போது டாக்டர்கள், ரேஷ்மாவை பரிசோதனை செய்தனர்.. பிறகு தலைவலி என்றதால், தலையில் சிடி ஸ்கேன் செய்தார்கள்.. அப்போதுதான் ஒட்டுமொத்த டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.. காரணம், ரேஷ்மாவின் தலையில், ஊசிகள் ஏராளமாக கிடந்தன.. இதையடுத்து, ரேஷ்மாவுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது.. அப்போது ரேஷ்மா தலையிலிருந்து மொத்தம் 7 ஊசிகள் அகற்றப்பட்டன.

ஆனாலும், ரேஷ்மாவுக்கு தலைவலி குறையவில்லை. அவரது உடல்நிலையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், புர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரேஷ்மாவை அனுமதித்து, மறுபடியும் சிகிச்சைக்கும், மருத்துவ கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டார்.

ஊசிகள்: கடந்த சனிக்கிழமை ரேஷ்மாவுக்கு மறுபடியும் ஆபரேஷன் செய்யப்பட்டது.. அப்போது அவரது தலையில் மேலும், 70 ஊசிகள் இருந்ததாம். மொத்தம் 77 ஊசிகளை ரேஷ்மா தலையிலிருந்து அகற்றினார்கள் டாக்டர்கள்.

இதற்கு பிறகு டாக்டர்கள் செய்தியாளர்களிடம் இதை பற்றி சொன்னபோது, "இதுவரை 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டு, பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகள் அகற்றப்பட்டிருக்கிறது... அதிர்ஷ்டவசமாக, ஊசிகளால் அந்தப் பெண்ணின் தலை எலும்பு ஓட்டில் எந்த காயமும் ஏற்படவில்லை.. மேற்புறமாக மட்டுமே ஊசிகள் குத்தி, காயங்கள் இருந்தன.. தலையில் மென்மையான திசுக்கள் என்பதால், காயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.

உளவியல் பிரச்சனை: உளவியல் ரீதியான பிரச்னைகளால் அந்த பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார்... 4 வருடங்களுக்கு முன்பு, அந்த பெண்ணின் அம்மா இறந்துவிட்டார்.. அப்போதிருந்தே, ரேஷ்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. அதனால், 2021-ல் தன்னுடைய ஊரிலுள்ள ஒரு மந்திரவாதியின் உதவியை நாடியிருக்கிறார். அப்போதுதான் சிகிச்சை என்ற பெயரில், அந்த மந்திரவாதி, ஊசிகளை எடுத்து, ரேஷ்மா தலையில் குத்தியிருக்கிறார்..

சில காலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தநிலையில், மறுபடியும் ரேஷ்மாவுக்கு தலைவலி அதிகமாகியிருக்கிறது. அதுவே, தொடர் தலைவலி ஏற்படவும் காரணமாகியிருக்கிறது" என்றனர்.

உடல்நலம்: இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் அந்த மந்திரவாதி குறித்து போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின் அடிப்படையில், அந்த மந்திரவாதியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.. ரேஷ்மாவை போல இன்னும் எத்தனை பேருக்கு, இப்படி சிகிச்சை என்ற பெயரில் ஊசிகளை தலையில் குத்தினார் என்று தெரியவில்லை..

எனவே, மந்திரவாதியிடம் விசாரணை நடந்து வருகிறது.. இப்போது ரேஷ்மா முன்பைவிட இப்போது உடல்நலம் தேறி இருக்கிறாராம்.. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+