ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மாதம் பதவியேற்றார். புதிதாக ஒரு அரசு பதவிக்கு வரும்போது நிர்வாகங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். குறிப்பாக அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக டிஐஜியாகவும், சென்னை காவல்துறை தலைமையக துணை ஆணையர் பால கிருஷ்ணன், சென்னை காவல்துறை சைபர் குற்றப்ப்பிரிவு துணை ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு III, டிசிபி ஆரோக்கியம், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை எஸ்பி/ உதவி ஐஜி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் வனிதா, ஆவடி காவல் ஆணையரக டிசிபி ஆகவும், சென்னை காவல்துறை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன எஸ்பி ஆகவும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார், சென்னை காவல் வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டீபன் ஜசுபாதம், சென்னை மத்திய குற்றப்பிரிவு III துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள்
கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் ஐபிஎஸ், திருநெல்வேலி நகர கிழக்கு துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரபாகர் ஐபிஎஸ் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி எஸ்.பி மகேஸ்வரன், கோயம்புத்தூர் நகர போக்குவரத்து டிசிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல பல்வேறு மாவட்ட எஸ்பிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக கார்த்திகேயன், கடலூர் மாவட்ட எஸ்.பியாக விவேகானந்தா சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம்
சேலம் எஸ்.பி. - குத்தாலிங்கம்
திருவண்ணாமலை எஸ்.பி. - கார்த்திகேயன்,
கடலூர் எஸ்.பி. - விவேகானந்த சுக்லா,
திருவள்ளூர் எஸ்.பி. - சாய் பிரனீத்,
திண்டுக்கல் எஸ்.பி - ஜெயகுமார்,
விழுப்புரம் எஸ்.பி. - மதிவானன்,
விருதுநகர் எஸ்.பி. - விமலா
தர்மபுரி எஸ்.பி. - அருண் கபிலன்
கிருஷ்ணகிரி எஸ்.பி. - அனிதா
நாமக்கல் எஸ்.பி. - யாதவ் கிரிஷ் அசோக்
மதுரை எஸ்.பி. - தேவநாதன்
நாகை எஸ்.பி - கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா
தேனி எஸ்.பி - கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்
நெல்லை எஸ்.பி. - விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி
மயிலாடுதுறை எஸ்.பி. - புக்யா ஸ்னேக பிரியா
திருப்பூர் எஸ்.பி - ஷ்ரிஸ்டி சிங்
அரியலூர் எஸ்.பி - செல்வகுமார்

















Click it and Unblock the Notifications