சென்னைவாசிகளுக்கு இப்படியொரு தலைவலி.. ஐயன்சேரி "வெல்லம்" தெரியுமா? கிளாம்பாக்கம், ஜிஎஸ்டி ரோடு பரபர
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்து 2 விதமான கோரிக்கைகள் புதிதாக கிளம்பியிருக்கின்றன.. என்ன நடக்கிறது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில்?
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு துவக்கி வைக்கப்பட்டதிலிருந்தே, அதிருப்திகளும் சேர்ந்தே வெடித்தன.. பஸ் ஸ்டாடில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அவசர கதியில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தரப்பிலிருந்து ஆதங்கம் வெளிப்பட்டது.

அதுவும் பொங்கல் பண்டிகை நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான பஸ்களும் இல்லை என்றுகூறி நள்ளிரவிலேயே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தை பயணிகள் முன்னெடுத்தது பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது. இதற்கு பிறகு தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டதையடுத்து, சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன.
தேசிய நெடுஞ்சாலை: அதுமட்டுமல்லாமல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான வழிகளை கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாளில் அறிக்கை அளிக்க அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் கடந்த வாரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இன்னும்கூட போதுமான வசதிகளை செய்து தர வேண்டும் என்கிறார்கள் பயணிகள்.. முக்கியமாக, ஜிஎஸ்டி சாலையின் நடுவிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதால், மாநகர பஸ்களை பிடிப்பதற்காக பயணிகளும் தங்கள் குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் கடக்க வேண்டியிருக்கிறது. நைட் நேரங்களில் இங்கு லைட் வசதியும் இல்லை.. சிசிடிவி கேமராவும் இல்லை.
சிசிடிவி கேமரா: எனவே, இந்த சாலையில் தடுப்புகளை அகற்றிவிட்டு சிசிடிவி கேமராக்களுடன் சிக்னலை அமைத்து, பாதுகாப்பு பணியில் போக்குவரத்து துறை போலீசாரை அமர்த்த வேண்டும், அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும்.. அல்லது வண்டலூர் பூங்கா சிக்னல் வளைவில் சென்று மறுபடியும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வந்து பயணிகளை இறக்கி விட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் சுகாதார உணவுகள் வழங்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.. கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு விரைவு பஸ்கள், அரசு பஸ்கள், மற்றும் ஆம்னி பஸ்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன.
வாந்தி மயக்கம்: இதனால் ஐயஞ்சேரி பிரதான சாலை ஓரத்தில் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பதாகவும், இதனை சாப்பிடுபவர்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி பேருந்துகளில் சரிவர பயணம் செய்யாமல் பாதி வழியிலேயே இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதாவது, இந்த கடைகளில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளிலும் வெல்லம் சேர்த்துவிடுகிறார்களாம்.. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை ஏறிவிடுகிறது.. சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர் வந்துவிடுகிறதாம்..
புகைமூட்டம்: அதுவும் இல்லாமல் ரோட்டோரத்திலேயே சாலையோரத்தில் விறகு அடுப்பில் சமைப்பதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாகிவிடுகிறது.. இதனால், கண் எரிச்சலில் சிக்கி மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகிறார்கள்.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications