Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக பறந்த உத்தரவு.. 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், இன்றிரவு தமிழ்நாடு முழுக்க பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ள நிலையில், மொத்தம் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் Armed Force DGPயாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புத்தாண்டு நாளை வரும் நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. முதலில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியான நிலையில், இப்போது ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Major Reshuffle in Tamil Nadu Police 70 IPS Officers Transferred Davidson Devasirvatham Promoted

தமிழ்நாடு முழுக்க சுமார் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் Armed Force DGPயாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐஜி அன்பு, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி கமிஷனர் சங்கர் மற்றும் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படி தமிழ்நாடு முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்குப் பதவி உயர்வும் தரப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+