அண்ணாசாலை பக்கம் போறீங்களா? இதை உடனே நோட் பண்ணுங்க.. சென்னையில் மூடப்படும் முக்கிய சாலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்ரோ பணிகள் நடப்பதால் சென்னையில் சில முக்கியமான சாலைகள் இன்று முதல் அடுத்த சில வாரங்களுக்கு மூடப்பட உள்ளன.

ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அடுத்த சில வாரங்களுக்கு இந்த மாற்றம் தொடரும்.

Major roads in Anna Salai to be closed from today due to metro works in Chennai

அதன்படி ஒயிட்ஸ் சாலையில் இன்றுமுதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பட்டுலாஸ் சாலை-ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை X திருவிக சந்திப்பு வரை போக்குவரத்து தடை; அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனம் ஸ்மித் X ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடை போக்குவரத்து: இன்னொரு பக்கம் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகளுக்காக ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது. எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகள் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

மெட்ரோ பாலம்: இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாலம் இடிப்பு: இந்த கட்டுமானம் காரணமாக சென்னையில் பல்வேறு பாலங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மயிலாப்பூரில் பாலம் ஒன்று இடிக்கப்பட உள்ளது., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) திருமயிலை எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள கல்வெர்ட் பாலத்தை இடிக்க முடிவு செய்துள்ளனர்.

கட்டம்-2 திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கப்பாதை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதால் இந்த பாலம் இடிக்கப்பட உள்ளது. மந்தவெளி அல்லது கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து லஸ் சந்திப்புக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருக்கும். இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பதிலாக புதிய பாலம் அருகில் கட்டப்பட்டு அதன் மூலம் வாகன போக்குவரத்து மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்மொழியப்பட்ட திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம், இரண்டு வழித்தடங்களை இணைக்கும் ஒரு மெட்ரோவாக அமைய உள்ளது. இங்கே 35 மீ ஆழத்தில் ஆழமான சுரங்கங்களை அமைக்கஉள்ளனர் .. திருமயிலை மற்றும் அது இணைக்கும் மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் 2028 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்படும். திருமயிலை நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகள் கட்டுவதன் காரணமாக இங்கே உள்ள பாலம் இடிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+