நாளை முதல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 5 முக்கிய ரயில்கள் மதுரையில் நிற்காது! ஏன் என்னாச்சு?
சென்னை: நாளை முதல் மதுரை ரயில்வே கோட்டத்தின் வழியாகச் செல்லும் ஐந்து முக்கிய ரயில்களின் வழித்தடத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதைகள் பராமரிப்பு பணிகளால் இந்த ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவனந்தபுரம் கோட்டப் பணிகளால் ரயில் சேவையில் பெரும் மாற்றம்! மதுரைக்கு வராது! சிவகங்கை, காரைக்குடிக்குச் செல்லும் முக்கிய ரயில்கள்!

டிசம்பர் மாதம் முழுவதும் நடைபெறும் ரயில் பாதைப் பராமரிப்புப் பணிகளுக்காக (Fixed Time Corridor Block), மதுரை ரயில்வே கோட்டத்தின் வழியாகச் செல்லும் ஐந்து முக்கிய ரயில்களின் வழித்தடத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், மதுரை சந்திப்புக்கு வர வேண்டிய ரயில்கள், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாகத் திருப்பி விடப்படுகின்றன.
திசை திருப்பப்படும் முக்கிய ரயில் சேவைகள் (Diversion)
டிசம்பர் 2025 முழுவதும் வாராந்திர மற்றும் தினசரி ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1. ரயில் எண் 16128 குருவாயூர் எக்ஸ்பிரஸ்
நவம்பர் 30 முதல் டிசம்பர் 28 வரை (சில நாட்கள் தவிர்த்து), குருவாயூரில் இருந்து இரவு 11:15 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிறுத்தங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
2. ரயில் எண் 16352 நாகர்கோவில் - மும்பை CST எக்ஸ்பிரஸ்
டிசம்பர் 04, 07, 11, 14, 18, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயில், மதுரை மற்றும் திண்டுக்கல் நிறுத்தங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாகத் திருப்பி விடப்படும்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.
3. ரயில் எண் 12666 கன்னியாகுமரி - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
டிசம்பர் 06, 13, 20, 27 ஆகிய சனிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிறுத்தங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.
4. ரயில் எண் 07229 கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயில்
டிசம்பர் 05, 12, 19, 26 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில், மதுரை, கொடைக்கானல் நிறுத்தங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திண்டுக்கல் வழியாகத் திருப்பி விடப்படும்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.
5. ரயில் எண் 16340 நாகர்கோவில் - மும்பை CST எக்ஸ்பிரஸ்
டிசம்பரில் 01, 05, 08, 12, 15, 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயில், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிறுத்தங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி.
⏰ மறு கால அட்டவணை (Rescheduling)
ரயில் எண் 22631 மதுரை - பிகானீர் எக்ஸ்பிரஸ்:
டிசம்பர் 04, 11, 18 ஆகிய தேதிகளில் மதியம் 12:05 மணிக்குக் கிளம்ப வேண்டிய ரயில், 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:30 மணிக்குக் கிளம்பும்.
மதுரை வழியாகப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பயணத்தைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications