நிம்மதியே கிடைக்காது.. வானிலையில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்.. வல்லுனர் கொடுத்த வார்னிங்.. இதை படிங்க!
சென்னை: இன்று தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் அப்டேட் வெளியிட்டு உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
வெயில்: தமிழ்நாட்டில் கோடை காலம் நிறைவு பெற்று மழைக்காலம் தொடங்க வேண்டியதற்கான காலம் நெருங்கிவிட்டாலும் இன்னும் வெயில் குறையவில்லை. முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.
வெயில் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது.தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
வானிலை அறிக்கை: இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் அப்டேட் வெளியிட்டு உள்ளது.
அதில், கடந்த வாரம் வடக்கு கடலோர தமிழ்நாடு மாவட்டங்களில் வெயில் எவ்வளவு அதிகமாக இருந்ததோ அதே அளவிற்கு வரும் நாட்களிலும்.. இந்த வாரமும் கடந்த வாரத்தை போல வெயில் மோசமாக இருக்க போகிறது.
முக்கியமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க போகிறது. தமிழ்நாட்டில் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று மிக கடுமையான வெப்பநிலை நிலவும். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்றும் வெயில் மிக கடுமையாக இருக்கும்.
மேற்கு காற்று காரணமாக சென்னைக்கு வர வேண்டிய கடல் காற்று வருவது இல்லை. சென்னையில் இன்று மதியம் வரை இதுதான் நிலைமையாக இருக்கும். இந்த மேற்கு காற்று பொதுவாக மழை காலத்திற்கு முன்பு வரும் என்பதால் இப்போது உள் மாவட்டங்களில் பெய்ய வேண்டிய மழை வெகுவாக குறையும்.
கடல் காற்று இன்று மாலை சென்னைக்கு உள்ளே ஒரு வழியாக வரும் பட்சத்தில் சென்னையின் மேற்கு பகுதிகளில் மாலையில் லேசான மழை பெய்யும். இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைவார்கள். சென்னையில் இன்று மொத்த வெப்பநிலை கொஞ்சம் குறைந்தாலும் உடனடியாக இந்த வெப்பத்தில் இருந்து நமக்கு நிம்மதி கிடைக்காது என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.
வெயில் என்ன? : நேற்று கூட தமிழ்நாட்டில் மிக மோசமான வானிலை நிலவியது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நேற்று கடுமையான வெயில் நிலவியது. 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தாண்டி நேற்று வெயில் நிலவியது.
இதையடுத்து கடந்த வாரத்தோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 2-3 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications