12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! தமிழக அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்!
சென்னை: 12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது பற்றி கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பகுதி நேர ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று, தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என்ற முறையில் பணியமர்த்தப்பட்டனர்.

ரூ.5,000 தொகுப்பூதியம்
இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில், ரூ.5000 மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது ரூ 10,000 ஊதியமாக பெற்று வருகின்றனர். வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம். ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான், அவர்கள், பகுதிநேர ஆசிரியர்களாக இப்பணியில் சேர்ந்தனர்.

அறிவிப்பு அறிவிப்பாகவே நிற்கிறது
ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு அதிகபட்சமாகவே ரூ.5000 மட்டும் தான் ஊதியம் கிடைத்தது. அதுதவிர, பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றினாலும், தங்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கடந்த 2017 மற்றும் 2019- ஆம் ஆண்டுகளில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என அப்போதைய அதிமுக அரசு அறிவித்த போதும், அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே நின்றுபோனது.

திமுக தேர்தல் அறிக்கை
இது தொடர்பாக, தங்களை பணி நிரந்தரம் செய்யவும், ஊதிய உயர்வு கோரியும், பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். எனவே, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பகுதி நேர ஆசிரியர்களின் நலன் கருதி, அவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போனஸ் தருக
பகுதிநேர ஆசிரியர்களின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக, ஊதிய உயர்வு வழங்கு வேண்டும். எதிர் வரும் தமிழர் திருநாளான, தை திருநாளையொட்டி பொங்கல் போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications