கண்டதேவி கோவில் தேர் வழக்கு: மாநில அரசால் முடியவில்லை என்றால் துணைராணுவத்தை அழைக்கவா? நீதிபதி கேள்வி
சென்னை: கண்டதேவி கோவில் தேர் வெள்ளோட்டத்தை மாநில அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை ஓட வைக்கவா? என தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியது.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி பகுதியை சேர்ந்த மகா சிதம்பரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற கண்டதேவி கோயில் ஆனி மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். தற்போது இந்த கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது வரை வெள்ளோட்டம் செய்யப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டத்திற்காக ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் தேர் வெள்ளோட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால் நீதிபதி மிகவும் காட்டமாக சில கேள்விகளை முன்வைத்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர் தயாராக உள்ளதாகவும் ஆனால் பல பிரிவினர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக குறிப்பிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் இன்னமும் பல பிரிவினருக்கு இடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்ற சூழல் வருத்தம் தருகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள் அரசின் நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட திருப்தி இல்லை.
மாநில அரசால் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியவில்லை என்றால் துணை ராணுவம் உதவியோடு தேரை ஓட வைக்கவா? அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்திவைக்கவா தேரை உருவாக்கினீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் வரும் 17 ஆம் தேதி தேர் வெள்ளோட்டத்தை நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications