இதையும் பண்ண வேண்டியது தானே.. விளாசிய கமல்.. திமுக மநீம இடையே "காப்பி-கேட்" மோதல்.. பரபர பின்னணி!
சென்னை: எங்களை நீங்க காப்பியடிச்சிட்டீங்க.. இல்லை இல்லை நீங்கதான் எங்களை காப்பியடிச்சிட்டீங்க என்று மாற்றி மாற்றி திமுக, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் இடையே கடுமையான மோதல் , வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இணையத்தை புரட்டி போட்டு இருக்கும் இந்த வாக்குவாதத்திற்கு பின் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கும் முன் 2019ல் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி முதலில் பார்க்கலாம்!
2019 லோக்சபா தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம் கிராமமாக, மக்களை சென்று சந்தித்து வாக்கு கேட்டார். பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தாமல் தனியாக கிராமங்களுக்கு சென்று கிராம சபை கூட்டங்களை நடத்தினார். இது பெரிய அளவில் திமுகவிற்கு கை கொடுத்தது.
லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெறவும் கூட இந்த கிராம சபை கூட்டங்கள்தான் காரணமாக இருந்தன. அப்போதே திமுகவிற்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இந்த ஐடியாவே நாங்கள் கொடுத்ததுதான் என்று மக்கள் நீதி மய்யம் கூறியது.

கிராம சபை கூட்டம்
கமல்ஹாசன்தான் கிராம சபை கூட்டங்களை முதலில் நடத்தினார். இதை ஸ்டாலின் காப்பியடித்துவிட்டார் என்று மய்யத்தினர் குறிப்பிட்டனர். இதற்காக கமல் நடத்திய கூட்டங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுகவும் 2005க்கு முன் நடத்திய கிராம சபை கூட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டு.. நாங்களும் அப்பவே மீட்டிங் போட்டோம் என்று கூறியது.

மோதல்
இந்த மோதல் லோக்சபா தேர்தலுக்கு பின் கொஞ்சம் தணிந்து இருந்த நிலையில் மீண்டும் தற்போது இதே விவாதம் நடக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று 'விடியலுக்கான முழக்கம்' என்ற தலைப்பில் திருச்சியில் திமுக சார்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. 10 ஆண்டு இலட்சிய பிரகடனம் என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை இந்த கூட்டத்தில் வெளியிட்டார்.

7 திட்டங்கள்
பொருளாதாரம், சமூக நீதி, கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை, நீர்வளம், ஊரக உட்கட்டமைப்பு ஆகிய 7 விஷயங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் 7 துறைகள் 7 உறுதிமொழிகள் என்ற அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
|
காப்பி
இந்த திட்டங்களைத்தான் திமுக காப்பியடித்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது, 7 உறுதிமொழிகள் எல்லாம் நாங்கள் சொன்ன அறிவிப்பு என்று மக்கள் நீதி மய்யம் கூறுகிறது. அதேபோல் திமுக வருடத்திற்கு 10 லட்சம் வேலை வாய்ப்பு என்றது. இதைத்தான் 5 வருடத்திற்கு 50 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கமல் கூறினார் என்று மய்யத்தினர் புகார் வைக்கிறார்கள்.
|
திமுக
இன்னொரு பக்கம் திமுகவினரோ இது எல்லாம் காப்பி இல்லை. எதிர்க்கட்சியாக ஏற்கனவே பலமுறை திமுக சொன்ன திட்டங்கள்தான்.. அதோடு மாநிலம் முழுக்க சர்வே எடுத்து மக்கள் மனதை ஆராய்ந்துதான் இந்த திட்டங்களை வகுத்து இருக்கிறோம். இதை காப்பி என்று சொல்ல கூடாது.. காப்பி அடிக்க நாங்கள் படம் எடுக்கவில்லை என்று பதிலுக்கு மக்கள் நீதி மய்யத்தினரை திமுகவினர் சீண்டி உள்ளனர்.

கமல் கோபம்
இதற்கு ஸ்டாலின் எதுவும் பதில் அளிக்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் கோபமாக நேற்றே இதை விமர்சனம் செய்தார். திமுக எங்களை காப்பி அடிக்கிறது,ஸ்டாலின் என்னுடைய திட்டத்தை காப்பி அடித்துவிட்டார். இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று கூறியதை திமுக காப்பியடித்துவிட்டது.ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல் பேசுகிறார். நாமே தீர்வு என்றால் அவர், ஒன்றிணைவோம் வா என்கிறார்.

ஸ்டாலின்
தற்போது இல்லதரசிக்கு ஊக்க தொகை என்றால் அதையும் அவர் அறிவிக்கிறார். 7 உறுதிமொழி உட்பட திமுகவின் அனைத்து அறிவிப்பும் காப்பி அடிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகும், என்றார். இன்றும் கூட டிவிட் செய்த கமல்ஹாசன், எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்., என்று கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மோதல்
இரண்டு தரப்பும் தங்கள் பக்க வாதம்தான் நியாயம் என்று கடுமையாக வாதம் செய்து வருகிறார்கள். இதனால் மய்யத்தினர் மற்றும் திமுகவினர் இடையே இணையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. யார் என்ன திட்டம் சொன்னால் என்ன? யார் மூலமாவது மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்றும் சிலர் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். மொத்தத்தில் இந்த மோதல் திமுக vs மநீம இடையே கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications