கையில் டார்ச் லைட்.. முகம் நிறைய புன்னகை.. பணம் மட்டும் மிஸ்ஸிங். பதறிப்போன பத்மபிரியா!
சென்னை: மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா, தங்கள் கட்சி சின்னமான டார்ச் லைட்டுடன் வேட்பு மனு தாக்கல். செய்தார். அப்போது வேட்புமனுவுக்கான கட்டண பணத்தை மறந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பணத்தை அவரது உதவியாளர் வந்து கொடுத்து மனு தாக்கல் செய்ய வைத்தார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி வேட்பு மனுதாக்கல் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

டிடிவி வேட்புமனு
நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுமட்டுமின்றி அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

டார்ச் லைட்
இன்று மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா, வேட்பு மனு தாக்கல் செய்தார். மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மநீம கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநிலச் செயலாளரும் அக்கட்சி மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியா தனது ஆதரவாளர்களுடன் கட்சி சின்னமான டார்ச் லைட்டை கையுடன் எடுத்து வந்தார் .

வேட்பு மனு கட்டணம்
மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு டெபாசிட் பணம் 10 ஆயிரம் ரூபாய் மறந்து வந்தார். பின்பு அவரது உதவியாளர் பணத்தை கொண்டு வந்து கொடுத்து மனு தாக்கல் செய்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்முறை
மதுரவாயல் தொகுதியில் தி.மு.க., சார்பில் காரம்பாக்கம் கணபதி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இங்கு பெஞ்சமின் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அதிமுக திமுக நேரடியாக முதல்முறையாக போட்டியிடுகின்றன. இவர்களுக்கு மநீம வேட்பாளர் பத்ம பிரியா சவாலாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications