கமல்ஹாசன் அதிரடி.. கோவை தெற்கு தொகுதியில் போட்டி.. அனல் பறக்கும் அரசியல் களம்
சென்னை: கோவை தெற்கு தொகுதி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அங்கு வேட்பாளராக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இங்கு வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது.

இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த பிறகு கடந்த லோக்சபா தேர்தலை அந்த கட்சி சந்தித்தது. அதில் கமல் களம் இறங்கவில்லை. அந்த வகையில் இதுதான் கமல்ஹாசன் சந்திக்கப்போகும் முதல் தேர்தல் ஆகும்.
கோவை தெற்கு தொகுதியில் இரண்டு தேசிய கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் மோத உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .கவனத்தை ஈர்த்துள்ளது அந்த தொகுதி. வானதி சீனிவாசன் எளிதாக வெல்லலாம் என்று நினைத்திருந்த நிலையில், கமல்ஹாசன் மிகப்பெரிய போட்டியாளராக அங்கு உருவெடுத்துள்ளார். ஏனெனில், அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications