பாஜக காயத்ரிக்கு ஒரு நீதி! திருச்சி சூர்யா சிவாவுக்கு ஒரு நீதியா? மக்கள் நீதி மய்யம் கடும் விமர்சனம்
சென்னை: பெண்கள் என்றால் ஒரு நீதியும், ஆண்கள் என்றால் ஒரு நீதியும் என்கிற அடிப்படையில் ஆணாதிக்க சிந்தனையோடு தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது என மக்கள் நீதி மய்யம் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்கட்சி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பேசிய தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சி விரோத செயல்பாடுகளுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

டெய்சி சரண்
அதுவே சிறுபான்மையினர் அணி தலைவியான மருத்துவர் டெய்சி சரணை தொலைபேசியில் அச்சிலேற்ற முடியாத, தகாத வார்த்தைகளால், தரம் தாழ்ந்து சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்தோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளர் சூர்யா சிவா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் (7 நாட்கள்) வரை கட்சி நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேற்கண்ட இந்த இரண்டு நிகழ்வுகளும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

உள்கட்சி விவகாரம்
ஏனெனில் உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதற்காக ஒரு பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிய மாநில தலைமை, சக பெண் நிர்வாகியை தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து, சமூக விரோதி போல கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஆண் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்காமல் ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் வெறும் 7 நாட்களுக்கு மட்டும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பெண்கள் என்றால் ஒரு நீதியும், ஆண்கள் என்றால் ஒரு நீதியும் என்கிற அடிப்படையில் ஆணாதிக்க சிந்தனையோடு தமிழக பாஜக செயல்பட்டு வருவதையும், தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பெண் நிர்வாகிகள்
கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளின் பாதுகாப்பையே கட்சியின் தலைமையால் உறுதி செய்யமுடியாத போது தமிழக மக்களுக்கும் குறிப்பாக தமிழக பெண்களுக்கு பாஜக எந்த வகையில் பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்? மேலும் எது, எதற்கெல்லாமோ பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியான உடன் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் தேசிய மகளிர் ஆணையம் மருத்துவரும் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவியுமான திருமதி டெய்சி சரண் அவர்கள் தகாத வார்த்தைகளால் மிரட்டப்பட்ட விவகாரத்தில் இதுவரை தானாக முன்வந்து விசாரணை நடத்த முன்வராதது ஏன்?

திருச்சி சூர்யா சிவா
ஒருவேளை மேலே ஆட்சி புரிபவர்களின் கடைக்கண் பார்வையும் அனுமதியும் கிடைத்தால்தான் மகளிர் ஆணையம் கூட செயல்படுமா? என்று பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசனும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் திருச்சி சூர்யா சிவாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது போல் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications