கமலுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அந்த அட்வைஸ்.. முக்கியமானவர்களுக்கு கொக்கி போடும் மநீம!
மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்காகவும் சட்டசபை தேர்தலுக்காகவும் தீவிரமாக தயாராகி வருகிறது.
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்காகவும் சட்டசபை தேர்தலுக்காகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அக்கட்சி அரசியல் ஆலேசகர் பிரசாந்த் கிஷோரை தங்களது பிரச்சாரம் மற்றும் அரசியல் திட்டங்களை வகுக்க நியமித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் ஆலோசகர்களில் பிரசாந்த் கிஷோர் மிகவும் முக்கியமானவர். முக்கியமாக பாஜக கட்சிக்கு கடந்த மூன்று முக்கியமான தேர்தல்களில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட வகையில் பொது இடத்தில் பேசுவது எப்படி, பேட்டிகளில், அரசியல் கூட்டங்களில் பேசுவது எப்படி என்றும் கூட பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

என்ன ஆலோசனை
இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி வருகிறார். தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தேர்தலுக்கு எப்படி தயார் ஆவது, கட்சியை எப்படி வலிமைப்படுத்துவது என்று ஆலோசனை வழங்கி வருகிறார். சட்டசபை தேர்தல் வரை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இவர் ஆலோசனை வழங்குவார்.

என்ன சொன்னார்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கியமான அரசியல் தலைவர்களை சேர்க்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். அதாவது தமிழகத்தில் அரசியல் உலகில் பிரபலமாக இருந்த, இருக்கும் நபர்களை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

ஆனால் கமல்
ஆனால் கமல்ஹாசன் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய கட்சியில், அணி மாறும் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்று அவர் கூறிவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்களுக்காக உழைத்த நேர்மையான அரசியல்வாதிகள் வந்தால் சேர்த்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

என்ன எப்படி
அதாவது மக்களுக்காக உழைத்து, தவறுகள் செய்யாமல் இருந்த நேர்மையான அரசியல்வாதிகள் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்கிறார்கள். இதற்கான பணியில் தற்போது மக்கள் நீதி மய்யம் இறங்கிவிட்டது என்றும் பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

வாய்ப்பு உள்ளது
இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் பெரிய அரசியல் தலைவர்கள் யாராவது இருக்க வாய்ப்புள்ளது. கட்சிக்கு முக்கிய ஆலோசனைகளை அவர்கள் வழங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications