கமலுக்காக ஜெர்மனியிலிருந்து வந்த பேனா! லக்சுரி கிஃப்ட் கொடுத்த மநீம நிர்வாகி! விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: கமல்ஹாசனுக்கு ஜெர்மனியிலிருந்து விஷேசமாக தருவிக்கப்பட்ட லக்சுரி வகை பேனா ஒன்றை பரிசரித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பிரச்சார அணிச் செயலாளர் அனுஷா ரவி.
ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க மோண்ட் பிளாங்க் (Mont Blanc) பேனாவானது, உலகின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பயன்படுத்தும் பேனாவாக திகழ்கிறது.
விக்ரம் திரைப்பட வெற்றியை கொண்டாடும் வகையில் அதில் தொடர்புடைய நபர்களுக்கு லக்சுரி பரிசுகளை கொடுத்து அசத்தி வரும் கமலுக்கு, அவரே எதிர்பார்க்காத வகையில் இந்த பேனா பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் திரைப்படம்
விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரும் வெற்றியடைந்ததால் கமல்ஹாசன் இன்னும் அந்த மகிழ்ச்சியில் இருந்து மீளவில்லை. வெற்றி உற்சாகத்துடன் தான் இன்னும் வலம் வந்துகொண்டிருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லக்சுரி வகை காரான லெக்சஸ் காரை பரிசாக அளித்து ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தார். அதைத் தொடர்ந்து லக்சுரி வகை கைகடிகாரமான ரோலக்ஸ் கடிகாரத்தை நடிகர் சூர்யாவுக்கு பரிசாக தந்து அசத்தினார்.

மோண்ட் பிளாங்க்
இதேபோல் உதவி இயக்குநர்களுக்கு விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி கொடுத்து அன்புமழை பொழிந்தார் கமல். இப்படி விக்ரம் திரைப்படத்தில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களுக்கும் பார்த்து பார்த்து மெனக்கெட்டு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்த கமலுக்கு, அவரே எதிர்பார்க்காத பேனா ஒன்று பரிசாக கிடைத்து அவரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க மோண்ட் பிளாங்க் பேனா என்றால் கமலுக்கு எப்போதுமே விருப்பமாம்.

மநீம நிர்வாகி
இதையறிந்து கமலுக்காக ஜெர்மனியிலிருந்து அந்தப் பேனாவை வரவழைத்து பரிசாக கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பிரச்சார அணிச் செயலாளர் அனுஷா ரவி. விக்ரம் வெற்றியை போல் இன்னும் பல வெற்றிகள் அடைய நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் எனக் கூறி அந்தப் பேனாவை அவர் பரிசளித்துள்ளார். மோண்ட் பிளாங்க் பேனாவை பொறுத்தவரை ரூ.16,000-ல் தொடங்கி ரூ.94,000 வரை பல நிலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை எவ்வளவு?
இதனிடையே அனுஷா ரவி கமலுக்கு பரிசாக தந்த நீல நிற மோண்ட் பிளாங்க் பேனாவின் மதிப்பு ரூ.35,000 இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோண்ட் பிளாங்க் பேனாவை பொறுத்தவரை பெருமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த வகை பேனாக்கள் இவ்வளவு காஸ்ட்லியாக உள்ளன. உலகின் முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்த வகை பேனாவை தான் பயன்படுத்துகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications