களத்தில் இறங்கும் கமல்.. மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!
சென்னை: மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில பாஜக அரசை கலைத்திட வலியுறுத்தியும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி ஆகிய இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் கொடூரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணிப்பூர் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் சார்பில், வரும் 6-ம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வள்ளுவர்கோட்டத்திலும், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு கோயம்புத்தூரிலும், காஞ்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு காஞ்சிபுரத்திலும், மதுரைமண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மதுரையிலும், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு சேலத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதேபோல, திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு நாகப்பட்டினத்திலும், நெல்லை மண்டலத்துக்கு உட்பட்டமாவட்டங்களுக்கு திருநெல்வேலியிலும் மற்றும் விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு திட்டக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மநீம மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications