சிஸ்டம் சரியில்லன்னு சொல்றவங்ககிட்ட வோட்டர் ஐடியே இல்ல.. அடித்து வெளுத்த கமல்ஹாசன்.. பரபரப்பு வீடியோ
சென்னை: சிஸ்டம் சரியில்லன்னு சொல்றவங்ககிட்ட வோட்டர் ஐடியே இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியும் முதல் சட்டசபை தேர்தலுக்காக தயாராக தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
|
வீடியோ
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், 18 வயதை பூர்த்தி செய்த ஒரு இந்தியனுக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய கவுரவம் வாக்காளர் என்ற அடையாளம் . அவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆயுதம் அது. கடமையை சரியாக செய்யாத சமுதாயம் தன்னுடைய உரிமையை இழந்துவிடும்.

என்ன சொல்கிறார்
மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரியில்லை, எல்லோரும் திருட்டு பயலுங்க என்று கீ போர்டில் கதகளி ஆடும் பலருக்கு வாக்காளர் அடையாளர் அட்டையே இல்லை. எந்த விஷயத்தை வேண்டாம் என்று நாம் நினைக்கிறோமோ, எந்த விஷயம் நமக்கு சம்பந்தம் இல்லை என்று நாம் நினைக்கிறோமோ அந்த விஷயத்தால் நமக்கு ஆபத்து வரும்.

சீண்டல்
வாக்களிப்பது மட்டுமே நமது பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு எல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பரிகாரம் அறிவித்து இருக்கிறது. நவம்பர் 21,22 அல்லது டிசம்பர் 12, 13 தேதிகளில் நடக்க உள்ள வாக்குச்சாவடி முகாம்களில் உங்கள் பெயர்களை பதிவு செய்யுங்கள். 12 வாக்குகள் மூலம் பீகாரில் ஒருவர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

முக்கியம்
ஒவ்வொரு வாக்கும் அவ்வளவு முக்கியம். 2021 தேர்தலுக்கு நீங்கள் உங்களுக்குள் சொல்லும் மந்திரம் "I Will CHANGE_ I Will VOTE"என்று இருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் என்பது அரசியல் மாற்றம் நிர்வாக மாற்றம் கிடையாது, ஆட்சி மாற்றம் என்பது மிகப்பெரிய தத்துவம்., என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications