"நாடாளுமன்ற நாயகன்".. எம்பி ஆகிறார் கமல்ஹாசன்.. கொடுத்த வாக்கை காப்பாற்றும் திமுக.. முடிவு?
சென்னை: திமுகவுடனான தேர்தல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், வரும் ராஜ்யசபா தேர்தல்-லில் போட்டியிட்டு, மாநிலங்களவைக்கு தேர்வாக உள்ளார். இன்னொரு பக்கம் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸுக்கு திராவிடக் கட்சிகளின் ஆதரவு இல்லாததால், தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது சிக்கலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் (Rajya sabha election) தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக நான்கு மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.
கமலுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 2 லோக்சபா சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்திய கமலுக்கு, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கி அவரை சம்மதிக்க வைத்துவிட்டது திமுக.
கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், ஒரு லோக்சபா சீட் தருகிறோம்; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என கமலிடம் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என ஒற்றை காலில் நின்றார்.
கமலின் கோரிக்கை
இந்த பிடிவாதம், தலைமைக்கு (திமுக) உடன்பாடில்லை. இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அப்படின்னா எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்' என கமலிடமே கேட்கப்பட்டது. அவரோ, தென்சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குங்கள் என கேட்டார். இதில் தென்சென்னை மட்டும் திமுகவிடமும், மற்றதெல்லாம் திமுக கூட்டணி கட்சிகளிடமும் சிட்டிங் தொகுதியாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு.
லோக்சபா தான் முக்கியம்னா எங்க சின்னத்தில் நில்லுங்க ; நீங்க விரும்பும் தொகுதியை ஒதுக்கிடுறோம். இல்லைன்னா, தேனி தொகுதியை ( காங்கிரஸ் தோற்றத் தொகுதி ) ஒதுக்குகிறோம். ஓ.கே.வா? ' என கேட்க, கமல் அதை மறுத்துவிட்டார். இப்படியே இருந்த நிலையில்தான், தொகுதி கிடைக்காததால் ராஜ்யசபா ஓ.கே. வா ? அது உங்களின் தனித்தன்மையை பாதிக்காது என சென்டிமெண்டாக எங்க தலைமை பேசியது. வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் கமல் என்று அப்போது திமுக வட்டாரங்கள் சொன்னது. இதெல்லாம் லோக்சபா தேர்தல் சமயத்தில் கடந்த வருடம் நடந்தது.
ராஜ்ய சபா சீட்:
அதன்படி நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக நாடாளுமன்றத் தேர்தலின் போது கமலுக்கு உறுதி தந்திருந்தது திமுக தலைமை.
இதற்காக ஒப்பந்தமும் போடப்பட்டது. திமுகவுடனான இந்த தேர்தல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு தேர்வாக உள்ளார். தமிழகத்தில் ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்படிப்பார்த்தால், தற்போது 134 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்எல்ஏக்கள் (ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் உள்பட) அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்பதால் திமுகவின் 4 எம்பி பதவிகளில் ஒன்று கமல்ஹாசனுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications