பாஜகவை டார்ச் அடித்து தேட வேண்டும்.. அவர்களுக்கு நோட்டா சின்னத்தையே அளிக்கலாம்.. கமல் கிண்டல்!
பாஜகவை டார்ச் லைட் அடித்துதான் தேட வேண்டும், அவர்களுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: பாஜகவை டார்ச் லைட் அடித்துதான் தேட வேண்டும், அவர்களுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிண்டல் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை தற்போதுதான் வெளியிட்டது.
இந்த சின்னம் குறித்து பாஜக எம்.பி இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசிய கருத்தும், அதற்கு கமல்ஹாசன் கூறிய பதிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம்
இதுகுறித்து பாஜக எம்.பி இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கிண்டலாக பேட்டியளித்தார். அதில், மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் கொடுக்கப்பட்டது சரிதான். அவர்கள் தங்கள் கட்சியை தேடட்டும். கட்சியின் மய்யம் எங்கே இருக்கிறது என்று டார்ச் லைட்டை வைத்து தேடட்டும் என்று கூறினார்.

கமல் கேள்வி
இந்த நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் கூறிய இந்த கருத்து குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்டது . பாஜக எம்பி பொன். ராதாகிருஷ்ணன் உங்களை இப்படி விமர்சிக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இந்த பதிலை கமல்ஹாசன் சிரித்துக் கொண்டே எதிர்கொண்டார்.

கமல் பதிலடி
அதில், பாஜகதான் அவர்கள் கட்சியை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே நோட்டாவில் கண்ணுக்கு படமால் இருக்கிறார். அவர்களை இந்த டார்ச் லைட்டை அடித்துதான் தேடி பார்க்க வேண்டும். ( டார்ச் லைட்டை செய்தியர்களை நோக்கி அடித்து தேடி பார்க்கிறார்)

என்ன கிண்டல்
மக்கள் அவர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் நோட்டாவிடம்தான் தோல்வி அடைகிறார்கள். அதனால் அவர்களுக்கு நோட்டவையே சின்னமாக கொடுக்கலாம். அப்போதுதாவது பாஜக நோட்டாவை முந்தட்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications