Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியா இல்லையா? எத்தனை சீட்? இழுபறிக்கு மத்தியில் நாளை அவசர கூட்டம் நடத்தும் கமல்ஹாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் உண்டா? எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்? என்ற குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில் நாளை அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது மநீம.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பாஜகவும் ஒருபுறம் வலுவான கூட்டணியை அமைக்க முயன்று வருகிறது.

Makkal needhi maiam kamalhaasan consults party executives on lok sabha election alliance

அதிமுக கூட்டணி: அதிமுக தரப்பில் இதுவரை எந்தக் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. தேமுதிக மற்றும் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக. வரும் நாட்களில் இந்தக் கூட்டணி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக இதுவரை 4 கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட் என்றும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சியும் ஆளுக்கொரு சீட் கேட்டு வருகின்றனர். இவர்கள் போக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட ஆர்வமாக உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கமல்ஹாசன், இந்த முறை திமுக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்தார் கமல். அதோடு, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றிருந்தார். வரும் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் திமுக - காங்கிரஸ் அணியில் இணைய விரும்புகிறார்.

மக்கள் நீதி மய்யத்தை திமுக தரப்பு இன்னும் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றாலும், மறைமுகமாக சீட் குறித்து பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 1 சீட் தர திமுக தயாராக உள்ளது. ஆனால் குறைந்தபட்சம் 2 சீட் வேண்டும் என்பதில் மநீம உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் 2 சீட் தரலாம், இல்லையென்றால் 1 சீட் தான் என்று திமுக தரப்பு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

கோவை லோக்சபா தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே அங்கு வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கோவை தொகுதியை கேட்டு வருகிறது. சீட் பஞ்சாயத்து முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்லும் நிலையில், தொகுதிப் பங்கீடு நிறைவு பெறாததால் வெளிநாட்டு ஷூட்டிங்கை கூட கமல்ஹாசன் தள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவுறுத்தியுள்ளார்.

நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, கமல்ஹாசன், தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. திமுக உடனான தொகுதி பங்கீட்டு இழுபறி அதன் மூலம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+