நாளை மாலை திமுகவில்.. இணையும் மநீம மகேந்திரன்.. கொங்கு மண்டலத்தை பலப்படுத்த சூப்பர் பிளான்
சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன் நாளை மாலை 5 மணிக்குச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாகப் போட்டியிட்டது. இதில் சமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
இதில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் படுதோல்வி அடைந்தது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கூட கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்

மக்கள் நீதி மய்யம்
சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து விலகினர். மநீம நிர்வாகிகள் பொன்ராஜ், சிகே குமரவேல், மௌரியா, சந்தோஷ்பாபு எனப் பலரும் கட்சியிலிருந்து விலகினர். குறிப்பாக. கட்சியில் கமலுக்கு அடுத்து முக்கியமான முகமாக அறியப்பட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனும் விலகியது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

மகேந்திரன்
கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகளின் குரலுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் கடுமையாக விமர்சனங்களை அவர் முன் வைத்தார். தேர்தல் முடிவிற்குப் பின் கமல்ஹாசன் மாறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மாறவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதேநேரம் தொடர்ந்து அரசியலில் கண்டிப்பாகப் பயணிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார், அப்போதே அவர் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவின.

திமுகவில் இணைகிறார்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன் நாளை திமுகவில் இணைகிறார். நாளை மாலை ஐந்து மணிக்குச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் திமுகவில் இணைகிறார். கொங்கு மண்டலத்தில் மநீம-வின் முகமாக இருந்த மகேந்திரனின் வருகை திமுகவை அங்கு வலுப்படுத்தும்.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலத்தில், திமுக பலவீனமாக உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலிலும்கூட கொங்கு மண்டலத்தில் பல இடங்களில் திமுக தோல்வியடைந்திருந்தது. குறிப்பாகக் கோவை மாவட்டத்தில் ஒரு இடத்திலும்கூட திமுக வெல்ல முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், மகேந்திரன் திமுகவில் இணைவது கொங்கு மண்டலத்தில் நிச்சயம் இருப்பை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications