இதோ இப்படித்தான்.. வளர்ந்த நாடுகளை போல தமிழகத்தை மாற்ற உள்ளோம்.. மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை
சென்னை: கோவையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் வைத்து மதியம் 12 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகிறார் கமல் ஹாசன். முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் வாக்குறுதி தொடர்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ் நாட்டை உருவாக்க என்ற தலைப்பின் கீழ் சில திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்.
மண், மொழி, மக்கள் காக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் கொள்கை பிரகடனம் இது. தலைநிமிரப் போகும் நம் தலைமுறைகளுக்கான விதை. இவ்வாறு டுவிட்டரில் கூறிவிட்டு, அவர் கூறியுள்ள வாக்குறுதிகளை பாருங்கள்.

அரசியல் வியாதிகள்
அறிவார்ந்த சமுதாய புரட்சியாலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாலும் தமிழ்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவோம், மக்களை ஏமாற்றி, அரசியல் பண்ணும் வஞ்சக போக்கையும், மக்களை அடிமையாக்கி, ஏழ்மையாக்கி, கடனாளியாக்கி மக்கள் பணத்தை கொள்ளையடித்து ராஜபோகமாய் வாழும் அரசியல் வியாதிகளுக்கு விடை கொடுப்போம்.

தமிழக பொருளாதாரம்
தமிழக அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஒரு நல்ல அடைமழையாய் மாறுவோம் வாருங்கள். நம் எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல, தமிழ் பண்பாட்டு, கலாச்சார பெருமைமிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம். சீரமைப்போம் தமிழகத்தை தேர்ந்தெடுத் வாக்களிப்போம். ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் - மக்களாட்சி விவசாயம், தொழில், உற்பத்தி மற்றும் சேவைத் துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15-20% வளர்ச்சியை உறுதி செய்து $1 ட்ரில்லியன் (ரு 60-70 லட்சம் கோடியாக) ஆக உயர்த்துவோம்.

ஒவ்வொருவருக்கும் 7 லட்சத்திற்கு மேல் வருமானம்
தனி நபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் 1-2 கோடிப்பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்து, தனி நபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்
நதி நீர் இணைப்பு, அதி திறன் நீர் வழிச்சாலை, நீர் நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் சுத்தமான குடிநீர் - நீலப் புரட்சி

ஸ்மார்ட் கிராமங்கள்
விவசாயம் - இயற்கையும், அறிவியலும் சார்ந்த நிரந்தரப் பசுமைப் புரட்சி, விவசாய பொருள்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் - ஏற்றுமதி வரை உலக சந்தை மயமாக்கல், காடு வனம் அடர்த்தியாக வளர்ப்பு, மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி, ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி, கிராமப்புற சுயசார்பிற்கும், தொழிலுக்கும், விவசாயத்திற்கும் மதிப்புகூட்டுதல், ஏற்றுமதிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும், SMART VILLAGE உருவாக்கத்திற்கும் - அப்துல்கலாம் புரா திட்டம்

படிப்பு சுமை குறைப்பு
அரசு பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்பாடு, அடிப்படை கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைகல்வி 9-10 வரை சீர்திருத்தம், மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு, 9.1.3 கோடிப் பேருக்கு உலக தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மேம்பாடு.

நீட் தேர்வுக்கு பதில் சீட்
உயர்கல்வி - உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றம், உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம். தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத் திட்டத்தில் MBBS படிப்பிற்கு SEET, அனைவருக்கும் உலக தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவ கல்வி, உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்.

மாசு இல்லாத ஆலைகள்
UNO - Unorganised to Organised - அனைத்து தொழிலாளர் நலவாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு உறுதிசெய்யப்படும். சுற்றுப்புற சூழலுக்கேற்ற தொழில் துறை மேம்பாடு, மாசு படுத்தும் 185 ஆலைகள் முற்றிலும் மாசில்லா ஆலைகளாக மாற்ற உறுதிசெய்யப்படும். நட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்ற மொழி பயில வாய்ப்பு
கிராமப்புற நகர்புற கட்டமைப்பு, தொழிற்சாலை எரிசக்தி, விவசாய சுற்று சூழல் மற்றும் நீர்நிலை கட்டமைப்பு உலக தரத்தில் மேம்பாடு
தமிழ் மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒரு வருடத்தில் ஆங்கில மொழி புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு.

மாநில சுயாட்சி
ஜாதி, மத வேறுபாடில்லா மக்களாட்சி அமைப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மதத்தின் பெயரால் குடியுரிமை மறுப்பை முற்றிலும் எதிர்ப்போம். ஈழத்தமிழ் அகதிகளாக வந்தோருக்கு குடியுரிமை வலியுறுத்துவோம். மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல் மற்றும் சட்ட வழி முறைகளை பின்பற்றி அதை நனவாக்கும் கூட்டணி அரசை மத்தியில் உருவாக்குவோம். தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுக்கு இணையான நாடாக்குவோம். இவ்வாாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications