அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை... வடசென்னை மக்களுக்கு ம.நீ.ம. சார்பில் நிவாரண உதவி
சென்னை: லாக்டவுன் காரணமாக வேலையின்றி, வருமானமின்றி சிரமப்படும் வடசென்னை பகுதி மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான பிரியதர்ஷினி ஏற்பாட்டில் அரிசி, பருப்பு, காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும் மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார் வழக்கறிஞர் பிரியதர்ஷினி.

தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏற்கனவே முழு வீச்சில் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யமும் இப்போது அந்த பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் கூட்டம் சேராதவாறு பயனாளிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், இதேபோல் லாக்டவுன் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்படுகிறது.

நிவாரண உதவிகள் புரியும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளை ஊக்குவிக்கும் வகையில் கமல்ஹாசனே சில நேரங்களில் நேரடியாக அலைபேசி மூலம் அழைத்து பாராட்டு தெரிவிக்கிறார். மேலும், காவல்துறையினருடன் இணைந்து சென்னையின் பிரதான இடங்களில் உள்ள சாலைகளில் கொரோனா வைரஸ் படத்தை வரைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவையிலும் மநீமவினர் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications