மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்... கமல் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

மண்டலங்கள் வாரியாக மாநிலச் செயலாளர்கள், பொதுச்செயலாளர்கள் என அனைத்து பிரிவுகளிலும் மாற்றம் செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அதற்கேற்றார் போல் இப்போது புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விடுத்துள்ள அறிக்கையில், கட்சி தொடங்கிய 14 மாதங்களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் பெரு மக்கள் ஆதரவு கிடைத்தது உற்சாகம் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

2021 தேர்தல்

2021 தேர்தல்

தமிழக அரசியலை மாற்றியமைக்க வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், இன்னும் வலிமையோடு களத்தில் இறங்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

5 பேருக்கு ஒரே பதவி

5 பேருக்கு ஒரே பதவி

அருணாச்சலம், ஏ.ஜி.மவுரியா, குமரவேல், சவுரிராஜன், உமாதேவி ஆகிய 5 பேர்களை பொதுச்செயலாளர்களாக நியமித்துள்ளார் கமல்ஹாசன். அதில் அருணாச்சலம் கமல் அலுவலகத்தை பார்த்துக்கொள்வார் என்றும், மவுரியா வடக்கு-கிழக்கு மண்டலத்தை பார்த்துக்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரவேல் தெற்கு மேற்கு மண்டலங்களின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பலருக்கு ஒரே பதவி

பலருக்கு ஒரே பதவி

கமல்ஹாசன் அறிவித்துள்ள மாநிலச் செயலாளர்கள் பட்டியலில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு செயலாளர்களாக முரளி அப்பாசும், சுகாசினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். காந்தி கண்ணதாசன் தரவுகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வார் என்றும், சத்யமூர்த்தி மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தை பார்த்துக்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.

கமீலாவுக்கு பதவி

கமீலாவுக்கு பதவி

கமீலா நாசர் சென்னை மண்டல செயலாளராகவும், மயில்சாமி கோவை மண்டல செயலாளராகவும், பொன்குமரன் நெல்லை மண்டல செயலாளராகவும், வழக்கறிஞர் ராஜசேகர் சேலம் மண்டல செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+