அப்படிப்பட்ட வளர்ச்சியே தேவையில்லை! என்எல்சிக்கு 'மய்யம்' கடும் எதிர்ப்பு.. கொந்தளித்த கமல்ஹாசன்
சென்னை: நெய்வேலியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்து என்எல்சி நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் என்எல்சி நிறுவனத்தின் நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவனம் நிலங்களை விளைக்கு வாங்கியது. இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிலத்திற்கான தொகையை வழங்கியது. இந்நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை நிறுவனம் நேற்று தொடங்கியது. இதற்றாக பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்களில் புல்டோசர் கொண்டு பயிர்கள் அழிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் என்எல்சி நிறுவனத்தின் நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நிலக்கரி சுரங்கப் பணிகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்கப் பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண் நிலங்களில் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் போராடுவார்கள் என்று தெரிந்ததால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையும் மீறி போராட்டங்கள் வெடித்து, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன.
பயிர்கள் விளைந்து நிற்கும் வயல்களில், ராட்சத இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்வது வேதனைக்குரியது. விளைநிலங்களுக்குக் கீழே தங்கமே கிடைத்தாலும், வேளாண்மை செய்வதே அறிவுடைமை. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளால் விவசாயிகள் உழவுத்தொழிலில் இருந்து வெளித்தள்ளப்பட்டு, விளைநிலங்கள் சுருங்கி வரும் சூழலில் வளர்ச்சி எனும் பெயரால் விவசாயம் அழிக்கப்படுவது மானுடத்திற்கே எதிரான அநீதி.
நிலக்கரிச் சுரங்கத்துக்காக பல நூறு ஏக்கரில் விளை நிலங்களைக் கையகப்படுத்த முற்படுவதும், அதற்கு எதிராக மக்கள் போராடுவதும் தொடர் கதையாகி வருகிறது. பொதுத்துறை நிறுவனமாகவே இருந்தாலும், மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, சுரங்க விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடுவதே சாலச் சிறந்தது. வேளாண் பெருமக்களின் எதிர்ப்பையும் மீறி, விளை நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்குத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைபோகக் கூடாது.
எதன்பொருட்டும் விவசாயிகளின் விளைநிலங்களைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தால்தான் வளர்ச்சி கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட வளர்ச்சி தேவையே இல்லை. வயிற்றுக்குச் சோறிடுவோரை வேதனைக்குள்ளாக்க வேண்டாம். விவசாயிகள், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும். ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications