விளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.. புதிய வீடியோ வெளியிட்ட மநீம
சென்னை: எரிவாயு.... எரியும் வாழ்வு என்கின்ற தலைப்பில் புதிய காணொலிக் காட்சி ஒன்றினை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி 40 இடங்களில் 341 கிணறுகள் அமைக்கப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எதிர்ப்பு குரல்
இந்த நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது.
எரியும் வாழ்வு
எரிவாயு.... எரியும் வாழ்வு என்கின்ற தலைப்பில் புதிய காணொலிக் காட்சி ஒன்றினை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இன்று வெளியிட்டிருக்கிறது. அதில் மிக எளிமையான முறையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வாழ்வாதாரத்தை வளர்க்கும் திட்டமா அல்லது அழிக்கும் திட்டமா என்பதனை விளக்கிக்கூறப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வம்
டெல்டா என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? அதை எவ்வாறு எடுப்பது என்று விளக்கப்பட்டிருக்கிறது. விளைநிலங்கள் அழிக்கப்படுவது குறித்தும், நிலத்தடி நீர் குறைவது, சட்டபூர்வமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் வழங்கப்படாமல் இருப்பது என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி கேட்டிருக்கிறது.

வணிக அரசியல்
உலக உணவு வணிக அரசியலுக்கு அரசு துணை போகின்றதா என்று துணைக்கேள்வி எழுப்பியுள்ளது அக்காணொலி. மண்ணிற்கு அடியில் தங்கமே இருந்தாலும் அது விளைநிலமாக இருப்பின் புறக்கணித்திட வேண்டும் என்று சொல்லி விளைநிலத்தை காத்திட வேண்டும் என்று விழிப்புணர்வினை உருவாக்கிடும் வகையில் இந்த காணொலி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications