மக்கள் நீதி மய்யத்தோட கொள்கை என்னென்னு 100 தடவை கேட்கிறீங்களே! இந்தாங்கப்பா.. நடிகை வினோதினி பதில்
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்னவென ஒரு நாளைக்கு 100 தடவை கேட்போருக்கு உரிய பதிலை நடிகை வினோதினி வைத்தியநாதன் அளித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகியும் நடிகையுமான வினோதினி தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு -
ஏதோ ஒரு எதிரியை முன்னிலைப்படுத்தியே கட்சிகள் இங்கு வளர்கின்றன. மக்கள் நலன் மறைந்து வெறுப்பே எஞ்சுகிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் வெறுப்பு தான் மேலோங்கியிருக்கிறது, கடந்த 70 ஆண்டுகளில். நிற்க.
மநீம -
பாம்பையும் மனிதனையும் பார்த்தால், பாம்பை அடிக்காமல், பிடித்து ஸ்னேக் பார்க்கிற்கோ, காப்பகத்திற்கோ அனுப்பிவிட்டு, மனிதனைக் காப்பாற்று.
சாதி, மதம், பொருளாதார பேதமென பிரிக்காமல், மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும், கோட்பாட்டில் மட்டுமே வேற்றுமை காணும் பண்பைத் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் எங்கள் தலைவர்
கமல்ஹாசன்.
அவ்வழியே நாம். இவ்வாறு வினோதினி வைத்தியநாதன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வினோதினி சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் தேசிய திரைப்பட விருதை பெற்றது. இதைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிசாசு, கடல், ஓ காதல் கண்மணி, ஜிகர்தண்டா, தலைமுறைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு -
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) February 19, 2024
சில கட்சிகளின் கொள்கைகளை film one-line போலச் சொல்லிவிட்டு, பின் எங்கள் கட்சியின் கொள்கையைச்சொல்கிறேன். சார்ந்தோர் எந்தெந்த கட்சியென்று நீங்களே கண்டறிவீராக. க்ளூவெல்லாம் கிடையாது.
1.…
வினோதினி எழுத்தாளரும் கூட ! இவருடைய சிறுகதைகள் பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் சமூகம் சார்ந்த கருத்துகளை அவ்வப்போது கூறி வருகிறார். அண்மையில் கூட ஜிஎஸ்டி குறித்து விமர்சித்து வினோதினி போட்டிருந்த வீடியோ வைரலானது. அது போல் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்துகள் குறித்து கிண்டலாகவே வினோதினி வீடியோக்களை வெளியிடுவார். இந்திய ரூபாயை விட அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதை விமர்சித்து அடுத்த வீடியோவையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து அக்கட்சியில் வினோதினி தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அவர் போட்ட ட்வீட்டும் வைரலானது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ள நிலையில் வினோதினியின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications