21 வேட்பாளர்கள் பெயரை அறிவித்த கமல்.. மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்குகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இந்த லோக்சபா தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிட உள்ளது.

தனித்து போட்டி
லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட இருக்கிறது. பெரிய கட்சிகளை மநீம தனியாக எதிர்கொள்ள உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய குடியரசுக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

வேட்பாளர் தேர்வு நடந்தது
இதற்கான வேட்பாளர்கள் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். கடந்த ஒரு வாரமாக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. சென்னையில் அவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. 40 தொகுதிக்கும், 18 இடைத்தேர்தல் தொகுதிக்கும் விருப்பமனு அளித்த 1300 பேருக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.

கடுமையான கேள்விகள்
இந்த தேர்வில் மிக கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது. அரசியல் அறிவு சார்ந்த கேள்விகள் நிறைய இதில் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

பட்டியல் வெளியீடு
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பட்டியலை வெளியிட்டார். தற்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மட்டுமே வெளியாகி உள்ளது. வரும் 24ம் தேதி இரண்டாம் கட்டவேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதன்படி
- வட சென்னை - மவுரியா
- மத்திய சென்னை கமீலா நாசர்
- ஸ்ரீபெரும்புதூர் - சிவக்குமார்
- அரக்கோணம் - ராஜேந்திரன்
- வேலூர் - சுரேஷ்
- கிருஷ்ணகிரி - எஸ். ஸ்ரீகாருண்யா
- தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்
- விழுப்புரம் (தனி)- வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி
- சேலம்- பிரபு மணிகண்டன்
- நீலகிரி (தனி) - ராஜேந்திரன்
- திண்டுக்கல் - டாக்டர் சுதாகர்
- திருச்சி - வி. ஆனந்தராஜா
- சிதம்பரம் (தனி)- டி.ரவி
- மயிலாடுதுறை - ரிபாயுதீன்
- நாகப்பட்டினம் (தனி) - குருவய்யா
- தேனி - வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி - பொன் குமரன்
- திருநெல்வேலி - வென்னிமலை
- கன்னியாகுமரி - எபினேசர்
- புதுச்சேரி - சுப்பிரமணியம்
- திருவள்ளூர் (தனி)- டாக்டர். லோக ரங்கன்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications