கமலின் மாஸ் பர்த் டே பிளான்.. 2 மாதத்தில் பிரச்சாரம்.. புது டிவி சேனல்.. மொத்தமாக களமிறங்கும் மநீம!

மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலுக்காக வரும் நவம்பர் மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலுக்காக வரும் நவம்பர் மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்காகவும் சட்டசபை தேர்தலுக்காகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அக்கட்சி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை தங்களது பிரச்சாரம் மற்றும் அரசியல் திட்டங்களை வகுக்க நியமித்துள்ளது.

தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தேர்தலுக்கு எப்படி தயார் ஆவது, கட்சியை எப்படி வலிமைப்படுத்துவது என்று அவர் ஆலோசனை வழங்கி வருகிறார். சட்டசபை தேர்தலுக்காக இதனால் மக்கள் நீதி மய்யம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

என்ன

என்ன

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்தகட்ட திட்டங்களை அவர் விளக்கி இருக்கிறார். அதன்படி மக்கள் நீதி மய்யம் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

எப்போது நடக்கும்

எப்போது நடக்கும்

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிறது. அதே நாளில் பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுக்க ஒரே நாளில் பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது, என்றுள்ளார். மேலும் கமல்ஹாசன் பெரும்பாலும் கோவையில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

மநீம

மநீம

அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக புதிய டிவி சேனல் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. சேனலுக்கு அனுமதி வேண்டி ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கமல்ஹாசன் பிறந்த நாளின் போதே சேனலும் துவங்கப்படும் என்கிறார்கள்.

ஆலோசனை

ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் நவம்பர் மாதத்திற்கு முன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. இதில் கட்சியில் புதிதாக இணையும் முக்கிய தலைவர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. தமிழக அரசியலில் முக்கியமாக இருக்கும், இருந்த நபர்கள் சிலர் மக்கள் நீதி மய்யத்தில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+