திருப்பூரில் ஆதிக்கம் செலுத்தும் திமுக.. கோவையில் என்ன நிலைமை.. மாலைமுரசு கருத்துக்கணிப்பு முடிவுகள்
சென்னை: அதிமுக கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை நடைபெறுகிறது. இதில் முக்கியமாக அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இதுதவிர இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் களமிறங்குகின்றன.

பொள்ளாச்சியில் இழுபறி
தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாலை முரசு தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று 26 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாலை முரசு வெளியிட்டுள்ளது. அதில் பொள்ளாச்சி தொகுதியில் இழுபறி நிலவுகிறது. பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 42% வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் 6 %, அமமுக மற்றும் நாம் தமிழர் தலா 3% வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு & சிங்காநல்லூர்
கோவை கிணத்துக்கடவு தொகுதியில் திமுக 44% வாக்குகளை பெற்று முதலிடம் பெறும். அதிமுக 38% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெறும். அமமுக 6%, நாம் தமிழர் 4%, மக்கள் நீதி மய்யம் 2% வாக்குகளை பெறும் . கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக 31% வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெறும். அதிமுக 30% வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் 26% வாக்குகளையும் பெறும். நாம் தமிழர் 4% மற்றும் அமமுக 6% வாக்குகளை பெறும் என்று மாலை முரசு தெரிவித்துள்ளது.

கவுண்டம்பாளையம் & கோவை வடக்கு
கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக 43% வாக்குகளை பெற்று முதலிடம் பெறும் அதிமுக 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் தலா 3% வாக்குகளை பெறும். அமமுக 2% வாக்குகளை பெறும். கோவை வடக்கு தொகுதியில் இழுபறி நிலவுகிறது. கோவை வடக்கு தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 41% வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் 9 %, நாம் தமிழர் தலா 4%, அமமுக 3% வாக்குகளை பெறும்

சூலூரில் முந்தும் அதிமுக
சூலூர் தொகுதியில் அதிமுக 42% வாக்குகளை பெற்று முதலிடம் பெறும். திமுக 40% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக 6% வாக்குகளை பெறும். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் தலா 4% வாக்குகளை பெறும். பல்லடம் தொகுதியில் திமுக 42% வாக்குகளை பெற்று வெல்லும். அதிமுக 38% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் கட்சிக்கு 6% வாக்குகள் கிடைக்கும். மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுகவிற்கு தலா 5% வாக்குகள் கிடைக்கும்.

திருப்பூரில் திமுக அதிக்கம்
திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக 40% வாக்குகளை பெறும். அதிமுக 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 6% வாக்குகள் கிடைக்கும். நாம் தமிழர் மற்றும் அமமுகவிற்கு தலா 5% வாக்குகள் கிடைக்கும். திருப்பூர் வடக்கு தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் (திமுக கூட்டணி) 43% வாக்குகளை பெறுவார். அதிமுக 40% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்கு தலா 5% வாக்குகள் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications