அதிமுகவை விட... இரண்டு மடங்கு இடங்களில் திமுக முன்னிலை.. மாலை முரசு கருத்துக்கணிப்பு
சென்னை: வட மாவட்டங்களில் பாமக வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைத்தாலும்கூட திமுக கூட்டணியும் அங்கு வலுவாக உள்ளதால் அதிமுகவுக்கு அங்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதாக மாலை முரசு தெரிவித்துள்ளது. இதுவரை 156 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திமுக+ 97 தொகுதிகள், அதிமுக+ 37 தொகுதிகள், அமமுக கூட்டணி ஒரு தொகுதி, 21 தொகுதிகளில் இழுபறி என்று மாலை முரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
மாலை முரசு தொலைக்காட்சி தினசி 26 தொகுதிகள் என்ற வீதத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிவித்து வருகிறது. இன்று சேலம் மற்றும் வடக்கு மாவட்டங்களில் அமைந்துள்ள தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தொடரும் திமுக ஆதிக்கம்
வந்தவாசி தொகுதியில் திமுக 50% வாக்குகளை பெறும். பாமக (அதிமுக+) 38% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். அமமுக+ 3%, நாம் தமிழர் 5%, மக்கள் நீதி மய்யம்+ 2% வாக்குகளையும் பெறும். செய்யாறு தொகுதியில் திமுக 48% வாக்குகளை பெறும். அதிமுக 41% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். அமமுக+ 2%, நாம் தமிழர் 4%, மக்கள் நீதி மய்யம்+ 2% வாக்குகளையும் பெறும்.

Array
ஆரணி தொகுதியில் திமுக 46% வாக்குகளை பெறும். அதிமுக 40% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். அமமுக+ 4%, நாம் தமிழர் 3%, மக்கள் நீதி மய்யம்+ 1% வாக்குகளையும் பெறும். போளூர் தொகுதியில் அதிமுக 45% வாக்குகளை பெறும். திமுக 43% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். அமமுக+ 1%, நாம் தமிழர் 3%, மக்கள் நீதி மய்யம்+ 2% வாக்குகளையும் பெறும்.

இன்று 14இல் திமுக 8இல் அதிமுக
கலசபாக்கம் தொகுதியில் அதிமுக 46% வாக்குகளை பெறும். திமுக 43% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும் . அமமுக+ 3%, நாம் தமிழர் 3%, மக்கள் நீதி மய்யம்+ 2% வாக்குகளையும் பெறும். இன்று மொத்தம் 26 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. அதில் திமுக கூட்டணி 14 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 8 தொகுதிகளிலும் வெல்லும். 4 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாக தகவல் என்று மாலை முரசு தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் பாமக வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைத்தாலும்கூட திமுக கூட்டணியும் அங்கு வலுவாக உள்ளதால் அதிமுகவுக்கு அங்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதாக மாலை முரசு தெரிவித்துள்ளது.

திமுக முன்னிலை
இன்றுடன் சேர்த்து 6 நாட்களில் இதுவரை 156 தொகுதிகளின் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது மாலை முரசு. அதில் திமுக+ 97 தொகுதிகளிலும், அதிமுக+ 37 தொகுதிகளிலும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல அமமுக கூட்டணி ஒரு தொகுதியில் வெல்லும். மேலும், 21 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகத் தகவல் மாலை முரசு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications