அடுத்த முதல்வர், அதிமுக அரசின் தவறு உள்பட மாலை முரசு எழுப்பிய 9 கேள்விகள்.. ஆச்சர்ய பதில்கள்
சென்னை: மாலை முரசு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின் போது எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் பதில் அளித்துள்ளனர். பிடித்த முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினுக்கு 40.65% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுவோம் என 43.30% பேர் அதிகபட்சமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாலைமுரசு தொலைக்காட்சி தினசரி 26 தொகுதியாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தது. இன்று சென்னை மண்டலம் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் திமுகவே முன்னிலையில் உள்ளது.
இந்நிலையல் மாலை முரசு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின் போது பல்வேறு கேள்விகளை எழூப்பியது.அவற்றின் பதில்களை இப்போது பார்ப்போம்

மகளிர் சுயஉதவிக்குழு
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களில் உங்களை கவர்ந்த திட்டம் எது? மாலை முரசு கேள்வி
- விவசாய நகைக்கடன் தள்ளுபடி என 48.51 சதவீதம் பேர் கருத்து
- மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி என 16.45 சதவீதம் பேர் கருத்து

திமுக கவர்ந்தது
எந்த கட்சியின் தேர்தல் அறிக்கை உங்களின் மனதை கவர்ந்து உள்ளது?
- திமுகவின் தேர்தல் அறிக்கை மனதை கவர்ந்ததாக 43.77% பேர் ஆதரவு
- அதிமுகவின் தேர்தல் அறிக்கை மனதை கவர்ந்ததாக 39.11% பேர் ஆதரவு

பிடித்த முதல்வர்
பிடித்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று மாலைமுரசு கேள்வி
- பிடித்த முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினுக்கு 40.65% பேர் ஆதரவு
- எடப்பாடி பழனிசாமிக்கு 32.75% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்
- கமலுக்கு 11.45% பேரும், சீமானுக்கு 9.20% பேரும், தினகரனுக்கு 4.70% பேரும் ஆதரவு

திமுகவுக்க ஆதரவு
இந்த தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு என மாலைமுரசு டிவி கேள்வி
- இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுவோம் என 43.30% பேர் ஆதரவு
- அதிமுக கூட்டணி ஓட்டு போடுவோம் என 40.30% பேர் ஆதரவு
- அமமுகவிற்கு 4.50% பேரும், நாம் தமிழருக்கு 3.90% பேரும் ஆதரவு
- மக்கள் நலக்கூட்டணிக்கு ஓட்டு போடுவோம் என 3.20% பேர் ஆதரவு

சரியில்லை என கருத்து
மத்திய அரசின் செயல்பாடு எவ்வாறு? என மாலை முரசு கேள்வி
- மத்திய அரசின் செயல்பாடு சரியில்லை என 52.52% பேர் கருத்து
- மத்திய அரசின் செயல்பாடு நன்று என 27.24% பேர் கருத்து
- மத்திய அரசின் செயல்பாடு மிக நன்று என 10.21% பேர் கருத்து
- மத்திய அரசின் செயல்பாடு குறித்து 10.03% பேர் கருத்து தெரிவிக்கவில்லை

அதிமுக தவறு
கடந்த 10 ஆண்டுகளில் ஆளும் அரசுகள் செய்த தவறு எது?
- ஸ்டைர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பத்தை 49.53% பேர் கூறியுள்ளனர்
- எட்டு வழிச்சாலை என 21.88 சதவீதம் பேர் கூறியுள்ளனர்
- நீட் தேர்வு-தற்கொலை என 18.70 சதவீதம் பேர் கூறியுள்ளனர்
- ஒன்றும் இல்லை என 5.01 சதவீதம் பேர் கூறியுள்ளனர்

பலர் ஆதரவு
குடும்ப அரசியல் பற்றி உங்கள் கருத்து என மாலைமுரசு கேள்வி
- குடும்ப அரசியல் தவறில்லை என 54.61 சதவீதம் பேர் கருத்து
- குடும்ப அரசியல் தவறு என 25.35 சதவீதம் பேர் கருத்து
- குடும்ப அரசியலை வரவேற்பதாக 10.96 சதவீதம் பேர் கருதது
- குடும்ப அரசியல் குறித்து கருத்து இல்லை என 9.09 சதவீதம் பேர் தெரிவித்தனர்

நன்று என கருத்து
பிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? என மாலைமுரசு டிவி கேள்வி
- பிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் நன்று என 53.49 சதவீதம் பேர் கருத்து
- பிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் சரியில்லை என 24.77 சதவீதம் பேர் கருத்து
- பிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் மிக நன்று என 14.77 சதவீதம் பேர் கருத்து
- பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் பற்றி 7.81% பேர் கருத்து கூறவிரும்பவில்லை

நன்றாக செயல்பட்டது
தமிழக அரசின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என மாலைமுரசு கேள்வி
- தமிழக அரசின் செயல்பாடு நன்று என 38.12% பேர் கருத்து
- தமிழக அரசின் செயல்பாடு சரியில்லை என 34.36% பேர் கருத்து
- தமிழக அரசின் செயல்பாடு மிக நன்று என 15.33% பேர் கருத்து
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications