வேலூரில் தி.மு.க.வின் செல்வாக்கு தொடரும்.. துரைமுருகனுக்கு அதிரி, புதிரி வெற்றி.. மாலை முரசு சர்வே!
சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெற்றி பெறுவார் என்று மாலை முரசு டி.வி கருத்து கணிப்பு கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தேர்தல் கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வேலூரில் திமுக செல்வாக்கு
இந்த நிலையில் மாலை முரசு டி.வி. நடத்திய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் தொகுதியில் திமுக 46%, அதிமுக 38%, நாம் தமிழர் 5%, மநீம 4%;, அமமுக 3% வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

குடியாத்தம் தொகுதியில் யார்?
குடியாத்தம் தொகுதியில் திமுக 47%; அதிமுக 39% ; நாம் தமிழர் 3%; மநீம 2%; அமமுக- 2% வாக்குகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் (அதிமுக) 45%; திமுக 43%; அமமுக 3%; நாம் தமிழர் 3%; மநீம 1% வாக்குகள் பெறும். அணைக்கட்டு தொகுதியில் அதிமுக 44%; திமுக 42% ; நாம் தமிழர் 3%; அமமுக 2%; மநீம- 1% வாக்குகள் பெறும் என்றும் கணிப்புகள் கூறியுள்ளது.காட்பாடி தொகுதியில் திமுக 52% ; அதிமுக 38% ; நாம் தமிழர் 3% வாக்குகள் பெறும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலும் தி.மு.க. தான்
ராணிப்பேட்டை மாவட்டம் .ராணிப்பேட்டை தொகுதியில் திமுக 49%; அதிமுக 39%; மநீம 4%; நாம் தமிழர் 3%; அமமுக 2% வாக்குகள் பெறும் . ஆற்காடு தொகுதியில் திமுக 46%; அதிமுக 40%; நாம் தமிழர் 4%; அமமுக 3%; மநீம 3% வாக்குகள் பெறும். சோளிங்கர் தொகுதியில் திமுக (காங்) 46%; அதிமுக 40%; அமமுக 4%; நாம் தமிழர் 3% - மாலைமுரசு கருத்து கணிப்பு என்றும் அரக்கோணம் தொகுதியில் அதிமுக 43%; திமுக 41%; நாம் தமிழர் 4% வாக்குகள் பெறும் என்றும் மாலை முரசு டி.வி கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

துரைமுருகன் ஆதிக்கம்
இந்த இரண்டு மாவட்டத்திலும் தி.மு.க ஆதிக்கம் செலுத்தும் என்று கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 10-வது முறையாக போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் 52% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்பின் தெரியவந்துள்ளது. அங்கு அதிமுக வேட்பாளராக ராமு களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications