ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ.. என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்தது தான் - மல்லை சத்யா விளக்கம்
சென்னை: மதிமுகவில் இருந்து துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டு வைகோ அறிவித்துள்ளார். இந்நிலையில், தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், தனது மகன் குறித்து மட்டுமே வைகோ சிந்திப்பதாகவும், வைகோ ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முக்கியப் பதவிக்கு வந்ததில் இருந்தும், வாரிசு அரசியல் குறித்தம் மல்லை சத்யா தொடர்ந்து விமர்சனங்களை செய்து வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், பொதுவெளியில் கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக பேசி வந்ததாக விளக்கம் கேட்டு கடந்த 17ஆம் தேதி மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு உரிய விளக்கத்தை கடந்த வாரம் அவர் அளித்திருந்தார்.

இந்நிலையில், மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச் செயலர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். தனது மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றும் மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications