Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ TVK.. இப்போ DVK! மீண்டும் தமிழகத்தில் ஒரு திராவிடக் கட்சி! நாம் தமிழர் சீமான் அப்படி சொன்னாரே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்துள்ளார். விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போட்டியாக திராவிட வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் திராவிடம் என்ற பெயரோடு கட்சிகள் ஆரம்பிப்பதில்லை என சீமான் கூறிய நிலையில் அதற்கு பதிலடியாகவும் திராவிட வெற்றிக் கழகம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மதிமுக ஆரம்பித்த போதும் அதற்குப் பிறகு வைகோவுடன் இணைந்தவர்களின் தற்போது பெரும்பாலானோர் விலகி விட்டனர். நாஞ்சில் சம்பத், திருப்பூர் முத்து ரத்தினம் என பல பிரபலங்களை குறிப்பிடலாம். திமுகவிலிருந்து வைகோ விலக்கப்பட்ட போது அவருக்கு உடன் நின்றவர்கள் துரை வைகோவின் வருகைக்குப் பிறகு கட்சியை விட்டு விலகி விட்டனர் அல்லது விலக்கப்பட்டு விட்டனர்.

அந்த வகையில் சமீபத்தில் விலக்கப்பட்டவர் தான் மல்லை சத்யா. நீண்ட காலமாக வைகோவின் நிழல் போலவே வலம் வந்தவர். இந்த நிலையில் துரை வைகோ கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கு தலைமை நிலையச் செயலர் பொறுப்பும், பின்னர் முதன்மை செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

Mallai Sathya MDMK seeman

மதிமுக பிளவு

இதனால் அதிர்ச்சியில் இருந்த மல்லை சத்யா இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து எம்பி தேர்தலிலும் துரை வைகோ நின்ற போது மல்லை சத்யா மிகக் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து சமாதான நடவடிக்கைகள் கைகொடுக்காத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்தார் வைகோ.

மல்லை சத்யா

அதற்கு பிறகும் துரை வைத்து மீதான விமர்சனங்களை மல்லை சத்யா நிறுத்தவில்லை. இந்த நிலையில் தான் தொடர்ந்த தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த அவர் இன்று 'திராவிட வெற்றி கழகம்' எனும் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். கடந்த ஆண்டு விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் ஆரம்பித்த நிலையில் அதற்கு போட்டியாக திராவிட வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

திராவிட வெற்றிக் கழகம்

பொதுவாக தமிழகத்தில் கட்சிகள் ஆரம்பிக்கும் போது 'திராவிடம்' என்ற வார்த்தையோடு ஆரம்பிப்பது வழக்கம். திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலையில் கடைசியாக பிரபலங்கள் ஆரம்பித்த கட்சிகளின் பார்த்தால் மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக்கழகம் ஆகியவற்றை சொல்லலாம். ஆனால் அந்த கட்சிகளின் பெயரில் திராவிடம் இல்லை. கடைசியாக விஜயகாந்த் ஆரம்பித்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தில் மட்டுமே திராவிடம் என்ற வார்த்தை இடம்பெற்று இருந்தது.

மீண்டும் திராவிடம்

இது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் கட்சி ஆரம்பித்த பிறகு திராவிடத்தை மறந்து விட்டார்கள். யாருமே திராவிடம் என்ற பெயரை தங்கள் கட்சிக்கு பெயருக்கு சூட்டுவதில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலத்தான் திராவிட வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் மல்லை சத்யா. அது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அல்லது பத்தோடு பதினைந்தாக கலைந்து போய்விடுமா? என்பதை காலம்தான் நிர்ணயிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+