கார்ப்பரேட் ’துரை’.. 32 வருஷம் எங்க உழைப்பை உறிஞ்சி! அடிவயிறு எரிகின்றது! வைகோவை விளாசிய மல்லை சத்யா
சென்னை: மதிமுகவில் பொதுச்செயலாளர் வைகோவுக்கும் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், 14 பக்கங்கள் கொண்ட மிக நீண்ட கடிதம் ஒன்றை வைகோவுக்கு எழுதியுள்ளார் மல்லை சத்யா. அதில் 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை ( வியாபார அரசியல்) நாடே பார்க்கிறது என பதிலடி கொடுத்துள்ளார்.
மதிமுகவில் நீண்ட காலமாக பயணிப்பவர் மல்லை சத்யா. வைகோவின் போர்படைத் தளபதிகளில் ஒருவராக விளங்கியவர். நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மதிமுகவில் இருந்து விலகிய நிலையில் மல்லை சத்யா வைகோவுடன் பயணித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைகோவின் மகன் துரை வைகோ கட்சிக்குள் வந்த பிறகு அவருக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது. மேலும் வைகோவுக்கு தலைமை நிலைய செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் துரை வைகோ மல்லை சத்யா இடையே மோதல் வலுத்தது.

மல்லை சத்யா
இந்த நிலையில் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறினார் வைகோ. ஆனாலும் இருவருக்கிடையே பனிப்போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் 'வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள்' என போராட்டம் ஒன்றை நடத்தினார் மல்லை சத்யா. இதை அடுத்து அவரை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் வைகோ. இதற்கிடையே வைகோவுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் மல்லை சத்யா.
கட்சி நீக்கம்
அதில்,"17/08/2025 தேதியிட்ட ஏழு பக்கங்கள் கொண்ட இரண்டு கடிதங்கள் கிடைக்கப் பெற்றேன். மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.ஏ.சத்யா ஆகிய என்னை உடனடியாக அனைத்துப் பொறுப்புகளிலிருந்து தற்காலிக நீக்கம் குறித்தும், கடிதம் கிடைக்கப் பெற்ற 15 நாட்களில் என் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளரான உங்களிடம் எழுத்துப் பூர்வமான விளக்கத்தை அளிக்கலாம் என்றும். அதாவது ஒரேநாளில் தங்களின் கையெழுத்து இட்டு வந்த இரண்டு கடிதங்களும் கிடைக்கப் பெற்றேன்.
டில்லி உச்ச நீதிமன்றம்
அது எப்படி ஒரேநாளில் விளக்கமும், கட்சியிலிருந்து நீக்குவது குறித்த நடவடிக்கையையும் எடுக்கமுடியும்? டில்லி உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடும் வழக்கறிஞர் திறன் கொண்டவர் தலைவர் வைகோ ஏன் இந்த முரண்பாடு? ஏன் இவ்வளவு குழப்பமும் தடுமாற்றமும்? முதல் கடிதம் விளக்கம் கேட்டும் அதே நாளில் என்னுடைய விளக்கத்தைப் பெறாமலேயே தற்காலிக நீக்கம் என்று கடிதம் வந்திருப்பது உட்கட்சி ஜனநாயக படுகொலை அல்லவா? மரணதண்டனை கைதிக்குக் கூட தண்டனையை நிறைவேற்றும் முன் கால அவகாசம் வழங்கப்படும் ஆனால் என் பொருட்டு அந்த அவகாசம் தர ஏன் தங்களுக்கு மனம் வரவில்லை? இது எந்தப் பிரிவின் கீழ் வருகிறது விளக்கம் சொல்லுங்கள்!
துரை வைகோ
இந்த நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் படுத்தப் படாத ஜனநாயக பண்பு நலன் சிறிது கூட இல்லாத வலதுசாரி கார்ப்பரேட் சிந்தனை ஓட்டம் கொண்ட உங்கள் மகன் துரை இருக்கின்றார் என்பதுதானே உண்மை! உங்களின் இந்த நிலைமைக்காக நான் வருந்துகிறேன். இது தீர்ப்பை எழுதி வைத்து விட்டு போலியான விசாரணை நடத்தும் சர்வாதிகார பாசிச சிந்தனை! ஊரை ஏமற்ற போலியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உட்கட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டீர்கள்!
வைகோ
என்னை அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிக நீக்கம் குறித்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று உங்கள் கருணையை எதிர்பார்க்கமாட்டான் இந்த மல்லை சி ஏ சத்யா. மானமே மண்டியிடாதே வீரமே வீழ்ந்து விடாதே என்ற மூதுரையை என் இதயத்தில் பதித்துக் கொண்டவன், சரணாகதி என்பது எப்போதும் என் அகராதியில் எழுதப்படாத ஒன்று.
உட்கட்சி ஜனநாயகம்
தலைவர் வைகோவே, அருள்கூர்ந்து உங்கள் வலது கையை எடுத்து உங்கள் இதயத்தின் பக்கம் வைத்து ஒரு நிமிடம் கண்களை மூடி என்னை நினைத்து சொல்லுங்கள்! நானா துரோகி நானா முதலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினேன்? உங்கள் மகன் துரை அரசியலுக்கு வரவேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தியது மற்றும் உட்கட்சி ஜனநாயக விரோதம் வாக்கெடுப்பு குறித்து முன்கூட்டியே 15 நாட்கள் அவகாசம் கொடுத்து அறிவித்தீர்களா?
விளக்கக் கடிதம்
வாக்குப் பெட்டி வைக்கும் வரை தலைமைக் கழக துணை பொதுச் செயலாளராக இருக்கும் எனக்கே நீங்கள் தெரிவிக்கவில்லை,வாக்கெடுப்பில் உங்கள் மகனுக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லி நீங்கள் பலரிடம் பேசினீர்கள், ஆதரவு திரட்டினீர்கள். வாக்கெடுப்பு எண்ணிக்கை முடிவு தெரியும் வரை நீங்கள் பட்ட அவஸ்தையை சகிக்க முடியாமல் இருந்தது, அதற்கு முன்பு நாங்கள் உங்களை அந்த நிலையில் பார்த்தது கிடையாது, ஒருவேளை அந்த காணொளி இருந்தால் எடுத்து போட்டுப் பாருங்கள்.
மகன் துரை
வாக்கெடுப்பு என்பது அந்த 106 பேர் கொண்ட நிர்வாக குழு மட்டும் தானா? உங்கள் மகன் துரை அரசியலுக்கு வருவது கட்சிக் கொள்கைக்கு எதிரானதாகும். அப்படி இருக்கும் போது வாக்கெடுப்பு நடத்தியதே வெளி வேஷம்! அப்படியே வாக்கெடுப்பு நடத்த முடிவு எடுத்து இருந்தால் இந்த முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்சினை கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முடிவு இது குறித்து ஏன் பொதுக்குழுவின் கருத்தை நீங்கள் அறிய முன்வரவில்லை? துரையின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு அவர் ஜமீன்தார் பாணியில் பண்ணையார் மனப்பான்மையோடு பூர்ஷ்வா போன்று மறைமுகமாக தலைமைக் கழக நிர்வாகிகளை முன்னணியினரை குறிப்பாக என்னை கருங்காலிகள், கருப்பாடுகள், சிலீப்பர் செல் போன்ற நாகரீகப் பண்பாடற்ற தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வந்ததை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை?
வாரிசு அரசியல்
துரை உங்கள் மகனாக இல்லாமல் இருந்தால் அப்படி பேச முடியுமா அல்லது பேசத்தான் விட்டு இருப்பார்களா? தங்க ஊசி என்பதற்காக எடுத்து கண்ணை குத்திக் கொள்ள முடியாது என்று தற்போது உங்கள் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்து இருக்கும் ஒருவரே உங்கள் மகன் துரை குறித்து உதிர்த்த பொன்மொழி. 2023 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நீங்கள் உங்கள் மகன் துரைக்கு அறிவுரை சொல்லி பேசிவிட்டு சொன்னீர்கள். இதை உங்கள் மத்தியில் சொன்னது போல் தனிப்பட்ட முறையில் எனது வீட்டில் சொல்லமுடியாது கோபித்துக் கொண்டு சண்டை இடுவார் என்று நீங்கள் பேசினீர்கள்! உங்களின் இந்த பரிதாபத்துக்குரிய நிலைமைக்காக நான் வருந்துகிறேன்.
மதிமுக
பாராளுமன்றத்தில் எத்துனை மத்திய அமைச்சர்களை கேள்விகளால் துளைத்து எடுத்தீர்கள்.
நீங்கள் எங்களை அரசியல் படுத்தினீர்கள் ஜனநாயகப் படுத்தினீர்கள் ஆனால் உங்கள் மகன் துரையை நீங்கள் அரசியல் படுத்தவில்லை. உங்களால் கட்டுப்படுத்த முடியாதவராக துரை இருக்கின்றார், எனவேதான் தொண்டர்களால் கட்டி எழுப்பப்பட்ட மதிமுகவை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உங்கள் மகன் துரை உங்கள் கண் முன்னாலேயே அந்த கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறார். அதை கை கட்டி வேடிக்கை பார்க்கும் ஒரு மௌன பார்வையாளராகவே நீங்கள் கையறு நிலையில் இருப்பது துயரம்
தலைமை நிர்வாகிகள்
கழகத்தின் தலைமை நிர்வாகிகள் குறித்த கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது என்று திடமாக வலியுறுத்தப்படுகிறது என்ற உங்கள் கடிதத்தை முடித்து வைத்து உள்ளீர்கள். அது தலைமை நிர்வாகிகளின் குறிப்பாக உங்கள் மகன் துரையின் நடவடிக்கையை பொறுத்தது. யாரும் இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை குறைகளை தவறுகளைச் சுட்டிக் காட்டக்கூடாது என்பது பாசிசத்தின் உச்சம்.
ஜனநாயகத்தின் மாண்பு
நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின் போது சொன்னது: "என்னைப் பற்றி நல்ல செய்திகளை போடாவிட்டாலும் பரவாயில்லை என் குறைகளை தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதுங்கள் ஆனால் ஒரு போதும் என்னைப் பற்றிய செய்திகள் மட்டும் போடாமல் இருந்து விடாதீர்கள்" என்றார். இதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. உங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாராவது இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கின்றார்களா சிலவேளைகளில் நீங்கள் அவசரப்பட்டு நிதானம் இழந்து தனிமனித தாக்குதலை சமூகம் குறித்து பரம்பரை தொழிலைக் குறித்து பேசி கண்டனத்திற்கு ஆட்பட்டு வருத்தம் தெரிவிக்கவில்லையா?
தலைவர் வைகோ
உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது எதையும் நாங்கள் நம்பாமல் கண்மூடித்தனமாக வாழ்வது என்றாலும் - வீழ்வது என்றாலும் தலைவர் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களை பின்பற்றி வந்தோம், ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி யாராவது புறம் பேசினால் அதை நம்புவீர்கள்.
பூர்ஷ்வா அரசியல்
தொண்டன்-தலைவன் மீது நம்பிக்கை வைத்து இருப்பான் ஆனால் தலைவன் தொண்டன் மீது நம்பிக்கை வைக்காமல் போனதன் விளைவே மதிமுகவின் இன்றைய நிலைமைக்கு காரணம். "அரசியல் பிழைத்தோற்கு அறமே கூற்றுவன் ஆகட்டும்" என்ற நீதியும் நின்று நிலைக்கட்டும். எங்கள் அடிவயிறு எரிகின்ற உளச்சான்று உண்மைகள் நிச்சயம் சுடும். 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறியத் துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள் இது மல்லை சத்யாவின் வாக்கு அல்ல சத்தியத்தின் வாக்கு" என கூறியுள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications