டெல்லியில் முக்கிய மீட்டிங்.. கார்கேவை இன்று சந்திக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்! கவனிக்கும் திமுக
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் மல்லிகார்ஜூன கார்கே இன்று டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளை பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சிகளை வீழ்த்த காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

அதேவேளையில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தும் முனைப்பில் பாஜகவும் தனது என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. 2014, 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த முறை அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இதனால் காங்கிரஸ் மேலிடம் மாநிலம் வாரியாக கட்சி தலைவர்களை ஆலோசித்து அங்குள்ள நிலைமை பற்றி விவாதித்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் டெல்லியில் பல்வேறு மாநில தலைவர்களை கார்கே சந்தித்து அறிவுரைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ள மல்லிகார்ஜூன கார்கே இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ளது. திமுக-காங்கிரஸ் இடையே நல்ல உறவு உள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றன.
மேலும் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. தற்போது ஆளும்கட்சியாக மாறி உள்ளதும் காங்கிரஸ் கட்சியாக உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையை விட திமுக கூட்டணியில் வழங்கப்படும் இடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் மல்லிகார்ஜூன கார்கே இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் டெல்லி சென்றுள்ளனர். கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியின் செல்வாக்கு எப்படி உள்ளது? திமுகவிடம் இருந்து எத்தனை இடங்களை பெறுவது? என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டத்தை திமுக தரப்பும் கவனிக்க தொடங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் தமிழக காங்கிர தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் தலைவராக கேஎஸ் அழகிரி கடந்த 4 ஆண்டுகளாக உள்ளார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுவார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இதுதொடர்பாக சில தலைவர்கள் கட்சி தலைமைக்கு கடிதமும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் அதுபற்றியும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications